வாடகை 3.5% குறைந்தது; காலி இடங்கள் 9.6% கூடின

வாடகை 3.5% குறைந்தது; காலி இடங்கள் 9.6% கூடின

2 mins read
65278f26-8a0e-4d8d-8a15-a8c437b50f8a
மத்­திய வட்­டா­ரத்­தில் அலுவலக இட வாடகை 2வது காலாண்­டில் மாற்­றமின்றி இருந்­த­து. இந்த வாடகை 2020 முதல் காலாண்­டில் 0.8% குறைந்­தது. படம்: கேப்பிட்டாலேண்ட் -

சிங்­கப்­பூ­ரின் மத்­திய பகு­தி­யில் சில்­லறை வர்த்­தக இடங்­க­ளின் வாடகை, இந்த ஆண்­டின் முதல் காலாண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் 2வது காலாண்­டில் 3.5% இறங்­கியதாகத் தெரியவந்துள்ளது.

மத்­திய பகு­தி­யில் சில்­லறை வர்த்­தக இடங்­க­ளின் விலை 2வது காலாண்­டில் 1.5% குறைந்­த­தா­க­வும் நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யத்­தின் புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன. இந்த இறக்­கம், முந்­தைய காலாண்­டில் 3.1% ஆக இருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

நாடு முழு­வ­தும் ஏப்­ரல் முதல் ஜூன் வரைப்­பட்ட கால முடி­வில், மொத்­தம் 364,000 சதுர மீட்­டர் பரப்­புள்ள சில்­லறை வர்த்­தக இடங்­கள் உரு­வாகி வந்­த­ன.

இந்த அளவு, முந்­தைய காலாண்­டில் 358,000 சதுர மீட்­ட­ராக இருந்­தது. காலி­யாக இல்­லாத சில்­லறை வர்த்­தக இடப் பரப்பு இந்த ஆண்­டின் 2வது காலாண்­டில் நிகர வாடகை இடப்­பரப்­பில் 93,000 சதுர மீட்­டர் குறைந்­தது. இது முந்­தைய காலாண்­டின் அள­வை­விட இரு மடங்­கிற்­கும் கொஞ்­சம் அதி­கம்.

மாறாக, சில்­லறை வர்த்­தக இடப் பரப்பு 4,000 சதுர மீட்­டர் அதி­க­ரித்­தது. இது முந்­தைய காலாண்­டில் 15,000 சதுர மீட்­டர் இறக்­கம் கண்­டது. இதன் விளை வாக நாடளாவிய சில்லறை வர்த்தக காலி இட விகிதம் 9.6% ஆகக் கூடியது.

மத்­திய வட்­டா­ரத்­தில் அலுவலக இட வாடகை 2வது காலாண்­டில் மாற்­றமின்றி இருந்­த­து. இந்த வாடகை 2020 முதல் காலாண்­டில் 0.8% குறைந்­தது.

மத்­திய பகு­தி­யில் இருக்­கும் அலு­வ­லக இடங்­க­ளின் விலை 2வது காலாண்­டில் 4.3% இறங்கி­ய­தா­க­வும் தெரிகிறது. நாடு முழு­வதும் இந்த ஆண்­டின் 2வது காலாண்டு முடி­வில் சுமார் 668,000 சதுர மீட்­டர் அலு­வ­லக இடங்­க­ளுக்­கான திட்­டங்­கள் இருந்தன.