மலேசியாவில் வெளிநாட்டு ஊழியர்கள் நடத்தப்படும் விதம் குறித்து அரசாங்கத்தை விமர்சித்த பங்ளாதேஷ் ஊழியர் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களை அரசாங்கம் பாரபட்சத்துடன் நடத்தியதாக முகம்மது ரைஹான் கபிர் என்ற அந்த பங்ளாதேஷ் ஊழியர் கூறியது குறித்து அல் ஜஸீரா நிறுவனம் செய்தி ஒன்றை இம்மாதம் 3ஆம் தேதி வெளியிட்டிருந்தது.
அந்தச் செய்தி தவறானது, நியாயமற்றது, வாசகர்களைத் தவறாக வழிநடத்துகிறது என பல்வேறு அதிகாரிகள் கருத்துக் கூறினர்.
அதைத் தொடர்ந்து, ரைஹானுக்கு கைதாணை பிறப்பிக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார்.
மலேசியாவிலிருந்து அவர் வெளியேற்றப்படுவார் என்று குடிநுழைவுத்துறை இயக்குநர் கைருல் ஸைமி தாவுத் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.


