அமைச்சரவை உறுப்பினர்களுக்குக் கூடுதல் பொறுப்புகளைக் கவனித்துக்கொள்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
அந்த வகையில், குமாரி இந்திராணி ராஜா இனி மக்கள் தொகை தொடர்பான விவகாரங்களில் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியனுக்கு உறுதுணையாக இருப்பார். மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் இனி நகராட்சி சேவைகள் அலுவலகத்துக்குப் பொறுப்பேற்பார்.
துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள திரு டான் கியட் ஹாவ், 'ரீச்' எனும் அரசாங்கக் கருத்தறியும் பிரிவின் தலைவராகவும் இருப்பார்.
துணை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள திருவாட்டி லோ யென் லிங் தென்மேற்கு வட்டார மேயராகத் தொடர்வதுடன் மேயர்களின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார். முன்பு மேயர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் இந்தத் தேர்தலில் போட்டியிடாத டாக்டர் டியோ ஹோ பின்.

