கல்வி அமைச்சுக்கு திரும்பும் லாரன்ஸ் வோங்

கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கல்வி அமைச்சுக்கு அமைச்சர் லாரன்ஸ் வோங்

திரும்புகிறார். புதிய கல்வி அமைச்சராக அவர் நேற்று நியமிக்கப்பட்டார். 2011ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 18 மாதங்களுக்கு அவர் கல்வி அமைச்சில் இருந்தார். கல்வி துணை அமைச்சராக இருந்த திரு வோங், பிறகு மூத்த துணை அமைச்சராகப் பதவி உயர்வு பெற்றார்.

கல்வி அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்பு அவர் தேசிய வளர்ச்சி அமைச்சராகப் பதவி வகித்தார். அவருக்குப் பதிலாக திரு டெஸ்மண்ட் லீ தேசிய வளர்ச்சி அமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.

திரு வோங் கல்வி அமைச்சில் இருந்தபோது கல்வித் துறைக்கு அவர் ஆற்றிய பங்கு மிகவும் முக்கியமானது எனத் தெரிவிக்கப்பட்டது.

பல்கலைக்கழகத் துறையை விரிவாக்கம் செய்யும் வழிகளைப் பற்றி ஆராயவும் பரிந்துரை செய்யவும் அமைக்கப்பட்ட ‘2015ஆம் ஆண்டுக்கும் அப்பாற்பட்ட பல்

கலைக்கழகக் கல்விப் பாதை குழு’வுக்கு அவர் தலைமை தாங்கி னார்.

சிங்கப்பூரர்களுக்குக் கூடுதல் வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் இந்தக் குழு அமைக்கப்பட்டது.

பட்டக் கல்வியில் பயில பல்

கலைக்கழகங்களில் கூடுதல் இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்று திரு வோங்கின் தலைமையின்கீழ் செயல்பட்ட 15 பேர் கொண்ட

அந்தக் குழு பரிந்துரை செய்து இறுதி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஒவ்வொரு பள்ளியிலும் கல்வி கற்கும் மாணவர்களில் 27 விழுக்காட்டினருக்கு மட்டுமே பல்

கலைக்கழகங்களில் இடம் கிடைத்தது. இதை 40 விழுக்காட்டுக்கு உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த இலக்கு இவ்வாண்டு

எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்

படுகிறது.

பல்கலைக்கழகங்களில் பயில கூடுதல் இடங்கள் வழங்குவது மட்டுமின்றி, பன்முகத்தன்மை கொண்ட பல்கலைக்கழகத் துறையை உருவாக்க திரு வோங்கின் தலைமையின்கீழ் செயல்பட்ட குழு இலக்கு கொண்டிருந்தது.

உயர்தர ஆய்வு மற்றும் கற்பித்தலை மையமாகக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களுடன் முழுநேர, பகுதிநேர, வேலை செய்துகொண்டே படிப்போருக்கான பட்டப் படிப்புகளை வழங்க குழு இலக்கு கொண்டிருந்தது.

புதிய கல்வி நிலையங்கள் செயல்முறை, பயிற்சி அடிப்படையிலான கல்விமுறைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் புதிய வகை பட்டதாரிகளை உருவாக்க வேண்டும் என்றும் குழு தெரிவித்தது.

அதே சமயம், பட்டக் கல்வி தொடர்ந்து தரமிக்கதாகவும் கட்டுப்படியாகக்கூடிய கட்டணத்திலும் இருக்க வேண்டும் என்று குழு வலியுறுத்தியது.

சிங்கப்பூரில் பட்டக் கல்வி பயில்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அது தெரிவித்தது.

பட்டம் பெற வேண்டும் என்ற அவா சிங்கப்பூரர்கள் மத்தியில் அதிகரித்திருப்பதை 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்

பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களில் கூடுதல் மாணவர்கள் பயில 2020ஆம் ஆண்டுக்குள் அங்கு கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

தேவையான, பயன்தரும் திறன்களைக் கொண்ட பட்டதாரிகளை உருவாக்குவது மிகவும் முக்கியம் என்று திரு வோங்கின் தலைமையின்கீழ் செயல்பட்ட குழு தெரிவித்த கருத்துக்குப் பிரதமர் லீ உடன்பட்டார்.

தரத்துக்கு முக்கியத்துவம் தராமலும் வேலை வாய்ப்புகள் இருக்கிறதா என்பது குறித்து சிறிதும் கவலைப்படாமலும் பட்டதாரிகளை உருவாக்கும் நிலை ஏற்

படக்கூடாது என்று பிரதமர் லீ எச்சரிக்கை விடுத்தார்.

பல்கலைக்கழகங்களில் கூடுதல் மாணவர்கள் பயில வழி வகுத்தது உயர் கல்விக்கு ஒரு மைல்கல்லாக அமைந்ததாக குழுவில் இடம்பெற்றிருந்த சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் தலைவர் சியோங் ஹீ கியட் தெரிவித்தார்.

“உயர்நிலைக் கல்வி பெற்ற மாணவர்களுக்கும் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயின்ற மாணவர்களுக்கும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பட்டம் பெற இந்தத் திட்டம் வாய்ப்பு அளித்துள்ளது.

“முன்பிருந்த நான்கு சுயேச்சை பல்கலைக்கழகங்களில் இருந்த கல்வி முறையுடன் வேறுபட்டு செயல்முறை பட்டக் கல்விக்குப் புதிய திட்டம் வித்திட்டது.

“அப்போதைய SIM பல்கலைக்கழகத்தில் புதிதாக வழங்கப்பட்ட செயல்முறை பட்டக் கல்விக்கான இடங்களுக்கு அரசாங்க நிதி கிடைக்க அமைச்சர் வோங்

ஆதரவு அளித்தார். அப்போது அந்தப் பல்கலைக்கழகம் மட்டுமே தனியார் பல்கலைக்கழகமாக இருந்தது. அதற்கு முன்பு அப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அமைச்சர் வோங் துணிச்சலாக தனியார் பல்கலைக்கழகத்திடம் அரசு நிதியுடனான கல்வித் திட்டத்தை நம்பி ஒப்படைத்தார்,” என்றார் பேராசிரியர் சியோங்.

முன்னாள் அமைச்சர்களின் சிறப்பான பணிகளை அமைச்சர் வோங் தொடர்வார் என்று பிரதமர் லீ நேற்று தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!