எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங்கிற்கு வழங்கப்படும் வசதிகள் பற்றிய விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பாட்டாளிக் கட்சி இரண்டு குழுத் தொகுதிகள், ஒரு தனித் தொகுதி ஆகியவற்றில் வெற்றி பெற்று பத்து இடங்களைப் பிடித்தது.
இதையடுத்து, அக்கட்சியின் தலைமைச் செயலாளர் திரு
பிரித்தம் சிங்கிற்கு எதிர்க்கட்சித் தலைவர் எனும் அதிகாரபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
"நாடாளுமன்றத்தில் இருக்கும் பிரதான எதிர்க்கட்சியின் தலைவரை அங்கீகரிப்பதே முக்கிய நோக்கமாகும்," என்று புதிய அமைச்சரவையைப் பற்றி அறிவிக்க நடத்தப்பட்ட மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தின்போது பிரதமர் லீ தெரிவித்தார்.
"இதன்மூலம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் மேலும் ஆக்கபூர்வமாக செயல்படுவர் என நாங்கள் நம்புகிறோம்.
"அரசாங்கத்திடம் கேள்விகளைக் கேட்பது மட்டுமின்றி மாற்றுத் திட்டங்களையும் பரிந்துரைகளையும் அவர்கள் முன்வைக்க வேண்டும்," என்று பிரதமர் லீ தெரிவித்தார்.

