கோ பூன் வானுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் லீ

கோ பூன் வானுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் லீ

1 mins read
6db6f0d1-571e-4bc5-91fa-56af386e52e9
-

பதவி விலகும் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானுக்கு (படம்) அண்மையில் டெங்கி காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் குணமடைந்து நேற்று காலை வீடு திரும்பியதாக புதிய அமைச்சரவையை அறிவித்தபோது பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.

தாம் பிரதமரானதிலிருந்து திரு கோ தமது அமைச்சரவையில் இருந்து வந்ததாக திரு லீ கூறினார். திரு கோவின் பங்களிப்புக்கும் நட்புக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

அனுபவம் வாய்ந்த திரு கோ, இளைய அமைச்சர்களுக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்கு வார் என்றும் அவரது அனுபவங்களையும் அறிவுத்திறனையும் அவர்களுடன் பகிர்ந்துகொள்வார் என்றும் திரு லீ தெரிவித்தார்.

ஓய்வுகாலத்தில் திரு கோ ஆரோக்கியமாகவும் துடிப்புடனும் இருக்க பிரதமர் லீ வாழ்த்தினார்.