அமெரிக்காவில் கைதான சிங்கப்பூரருக்குத் தூதரக உதவி

அமெரிக்காவில் கைதான சிங்கப்பூரருக்குத் தூதரக உதவி

1 mins read
a36f20fa-af6e-4415-b8b0-40c38e951ed8
டிக்சன் இயோ. -

அமெரிக்காவில் சீனாவுக்கு வேவு பார்த்ததாக கைதாகி இருக்கும் சிங்கப்பூரரான டிக்சன் இயோவுக்கு தூதரக உதவியை சிங்கப்பூர் வழங்குகிறது. சீன வேவுத்துறை அதிகாரிகளின் உத்தரவுக்கு இணங்கி அமெரிக்கர்களிடம் இருந்து ரகசிய தகவல்களைப் பெற்றதாக அந்த சிங்கப்பூரர் குற்றத்தை ஒப்புக்கொண்டு இருக்கிறார். இயோ சிங்கப்பூர் குடிமகன், அவருக்குத் தூதரக உதவிகளைச் செய்யவேண்டியது நமது கடமை என்று வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

டாக்டர் விவியன் இன்று மலேசிய வெளியுறவு அமைச்சரைச் சந்தித்து இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட பயண ஏற்பாடு பற்றி விவாதித்தார். அதற்குப் பிறகு உட்லண்ட்ஸ் ரயில் சோதனைச் சாவடியில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். டிக்சன் இயோ விவகாரத்தைப் பொறுத்தவரை மேற்கொண்டு தெரிவிப்பதற்குத் தன்னிடம் தகவல் எதுவும் இல்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் இத்தகைய வேவு வேலைகளில் ஈடுபடுவதைக் கண்டுபிடிக்கவும் தடுக்கவும் சிங்கப்பூர் எடுக்கும் நடவடிக்கைகள் பற்றி கேட்டபோது டாக்டர் விவியன் பதில் அளிக்கவில்லை. அமெரிக்காவுக்குள் சட்டவிரோத வெளிநாட்டு முகவராகச் செய்ல்பட்டு இருப்பதாகக் கூறும் ஒரு குற்றச்சாட்டின்பேரில் வாஷிங்டன் நகரில் உள்ள மத்திய நீதிமன்றத்தில் டிக்சன் இயோ குற்றத்தைக் ஒப்புக்கொண்டுள்ளார்.