நெட்ஃப்லிக்ஸ் சேவையில் சிங்கப்பூர் தமிழ் திரைப்படம், நாடகங்கள்

சிங்கப்பூரிலேயே தயாரிக்கப்பட்ட 106 திரை மற்றும் தொலைக்காட்சிப் படைப்புகள் நெட்ஃப்லிக்ஸ் இணைய காணொளித்தளத்தில் படிப்படியாகச் சேர்க்கப்படும் என நெட்ஃப்லிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தப் படைப்புகளில் வசந்தம் தொலைக்காட்சியில் ஒளியேறிய வேட்டை நாடகத் தொடர், வைஜெயந்தி, குருஷேத்திரம் ஆகிய நாடகங்களும் இடம்பெறும்.

கிளோவர் ஃபில்ம்ஸ், மீடியாகார்ப், எம்எம்2 என்டர்டெய்ன்மண்ட், மெமென்டோ ஃபில்ம்ஸ் ஆகிய ஊடக நிறுவனங்களுடனான பங்காளித்துவ முயற்சியின் காரணமாக இது சாத்தியமானதாக நெட்ஃப்லிக்ஸ், நேற்று வெளியிட்ட தனது செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஒளிவழி ஐந்தில் ஒளியேறிய இலோ இலோ, இயக்குநர் ஜாக் நியோவின் ‘ஹோம் ரன்’,’ ஐ நாட் ஸ்டுப்பிட்’ போன்ற படங்களையும் இனி ரசிகர்கள் பார்க்கலாம்.

தெரிவு செய்யப்பட்ட 106 படங்களும் நிகழ்ச்சிகளும் சிங்கப்பூரர்களால் சிங்கப்பூரர்களுக்காகச் செய்யப்பட்டவை என்று நெட்ஃப்லிக்ஸ் நிறுவனத்தின் தென்கிழக்காசிய பிரிவின் படைப்புகளின் தெரிவுக்குப் பொறுப்பேற்கும் நிர்வாகியான (content acquisition manager) ரஃபேல் பாங் தெரிவித்தார்.

“ எல்லோருக்கும் ஏதாவது இருக்க வேண்டும், பலதரப்பட்ட மக்களைத் திரைகளில் பிரதிபலிக்கவேண்டும் என்பது எங்கள் கொள்கை. எங்கள் சேவையில் இடம்பெறும் சிங்கப்பூர் தமிழ் படைப்புகள் இந்நாட்டுத் தமிழர்களை மகிழ்விக்கும் என நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் தமிழ் முரசிடம் கூறினார்.

சிங்கப்பூரின் தமிழ்ப் படைப்புகளைக் காண்போரின் வட்டம் மிகக் குறுகியதாக இருப்பதால் நெட்ஃப்லிக்ஸின் இந்த முடிவு இந்தப் படைப்புகளில் ஈடுபடுவோருக்கு உற்சாகத்தை அளிக்கும் என்று இச்சேவையில் புதிதாக இடம்பெறவுள்ள ‘குருஷேத்திரம்’ உள்ளூர் திரைப்படத்தின் இயக்குநர் டிடி தவமணி தெரிவித்தார். “ நம் கலைஞர்கள் இதனால் ஊக்கமடைவர். வெளிநாடுகளிலும் அவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம்,” என்றார் திரு தவமணி.

நெட்ஃப்லிக்ஸ் தளத்தில் வேறு ஏதேனும் நிகழ்ச்சிகள் சேர்க்கப்படவேண்டும் என விரும்பும் சந்தாதாரர்கள் https://help.netflix.com/en/titlerequest என்ற இணையப்பக்க முகவரியின் வழியாக தங்களது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!