சீனா: டிக்சன் இயோ உளவாளி அல்ல

சீனா: டிக்சன் இயோ உளவாளி அல்ல

1 mins read
346617e1-7b07-4ae8-9098-a8111bbf10b8
-

சிங்கப்பூரர் டிக்சன் இயோ அமெரிக்காவில் சீனாவுக்காக உளவாளியாக செயல்படவில்லை என்று சீனா தெரிவித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள அமெரிக்கா அளவுக்கு மீறி சந்தேகப்படுவதாக சீனா குறைகூறியுள்ளது.

அமெரிக்காவில் இயோ குற்றம் சட்டப்பட்டது குறித்து தாம் அறியவில்லை என்று சீனாவின் வெளியுறவு பேச்சாளர் வாங் வன்பின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார். " இருந்தபோதும் ஒன்றை நான் சொல்ல விரும்புகிறேன். சீனாவின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்தில் அமெரிக்கா தொடர்ந்து சீனாவின்மீது உளவு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகிறது," என்று அவர் கூறினார்.

"இந்த அளவுகடந்த சந்தேகத்தை உடனே நிறுத்தும்படி அமெரிக்காவை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று திரு வாங் கோரினார்.

இருந்தபோதும் டிக்சன் இயோ ஜுன் வெய், மற்றொரு நாட்டுக்காக உளவாளியாக செயல்பட்ட குற்றத்தை அமெரிக்க நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். சீன புலனாய்வுப் பிரிவுக்காக நன்கு தெரிந்தே செயல்பட்டதாகவும் சீனாவுக்காகச் செயல்பட்டவர்களைப் பல முறை சந்தித்ததாகவும் சீனாவுக்கு ஒவ்வொரு முறை செல்லும்போதும் தாம் சிறப்பான முறையில் நடத்தப்படுவதாகவும் இயோ எழுத்து மூலமாக ஒப்புக்கொண்டார்.

2018ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இயோ அரசியல் ஆலோசனை நிறுவனத்தை அமைத்து அதன் மூலம் சீனாவுக்காகத் தகவல்களைத் திரட்டியதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. பொதுமக்களுக்குத் தெரியாத விவரங்களைத் தெரிந்துள்ள அமெரிக்க நபர்களை ஆராய்ந்து அவர்களிடமிருந்து இயோ தனக்குத் தேவைப்படும் விவரங்களைத் திரட்டியதாகக் கூறப்படுகிறது. இதற்காக இயோ 'லிங்ட்இன்' உள்ளிட்ட சமூகத்தளங்களைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.