வழக்கறிஞரைத் தாக்கிய வழக்கறிஞர் (காணொளி)

சேமுவெல் சியாவ் தெங் பெங் என்ற வழக்கறிஞர், அவருடைய சட்ட நிறுவனத்தில் 2018ஆம் ஆண்டு தனக்குக் கீழே வேலை பார்த்த ஒரு பெண்ணின் நெற்றியில் இரண்டு முறை விரலால் குத்தியதாகவும் அதனால் அந்த ஊழியருக்கு வலி ஏற்பட்டதாகவும் விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.

கொடுத்த வேலையை முடிக்கவில்லை என்பதால் அந்த வழக்கறிஞர் கோபத்தில் இந்தக் காரியத்தைச் செய்தார் என்றும் கூறப்பட்டது. அதற்குப் பிறகும் அவருக்குக் கோபம் தீரவில்லை.

சில நிமிடங்களுக்குப் பிறகு, தன்னுடைய நிறுவனத்தின் இணை இயக்குநராக இருந்தவர் எங்கு சென்றிருந்தார் என்பதைத் தெரிவிக்க தவறியதற்காக தன் நிறுவனத்தில் வேலை செய்த பெண் வழக்கறிஞர் ஒருவரை அந்த வழக்கறிஞர் தாக்கினார்.

திருவாட்டி பிரெண்டா கோங் ஷின் யிங் என்ற அந்தப் பெண் வழக்கறிஞரை அவர் இரண்டு கன்னங்களிலும் நெற்றியின் உச்சியிலும் அறைந்தார் என்று மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையின் போது கூறப்பட்டது. திருவாட்டி கோங் 2018 மே 12 ஆம் தேதி போலிசில் புகார் செய்தார்.
திருவாட்டி கோங், 26, என்பவரை தாக்கியதாகக் கூறும் குற்றச்சாட்டின் பேரிலும் திருவாட்டி ரேச்சல் காங் பெய் ஷான், 21, என்ற மாது மீது பலவந்தமாக நடந்துகொண்டதாகக் கூறும் ஒரு குற்றச்சாட்டின் பேரிலும் வழக்கறிஞர் சியோ குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அலைக்கழித்ததாகக் கூறும் ஒரு குற்றச்சாட்டும் பலவந்தமாக நடந்துகொண்டதாகக் கூறும் ஓர் இரண்டாவது குற்றச்சாட்டும் தண்டனை விதிக்கப்படும் போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
வழக்கறிஞர் சாமுவேல் சியோ, 47, சிங்கப்பூரர். அவர் ஒரு சில நிறுவனங்களை நடத்தி வந்தார்.
சேமுவெல் சியாவ் லா கார்ப்ப ரேஷன் என்ற சட்ட நிறுவனமும் பீம் ஆர்ட்டிஸ்ட்ஸ் என்ற நிறுவனமும் அவற்றில் அடங்கும் என்று தெரி விக்கப்பட்டது.

வழக்கறிஞர் சியாவுக்கு சம்பவத்திற்கு முன்பும் சம்பவத்தின்போதும் சம்பவத்திற்குப் பிறகும் மனஉளைச்சல் ஏதேனும் உண்டா என்பதை மதிப்பிடுவதற்காக வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

விசாரணைக்கு முந்தைய விசாரணை ஆகஸ்ட் 13ஆம் தேதி நடக்கும். குற்றவாளி என்று தீர்ப்பானால் சியாவுக்கு இரண்டாண்டு வரை சிறைத்தண்டனையும் $5,000 வரை அபராதமும் விதிக்க முடியும்.
பலவந்தமாக நடந்து கொண்டிருந்ததாகக் கூறம் குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளி என்று தீர்ப்பானால் மூன்று மாதம் வரை சிறையும் $1,500 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!