சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்துக்கு கிடைத்துள்ள புதிய வரவு: அரிய வகை கங்காரு குட்டி

சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்துக்கு கிடைத்துள்ள புதிய வரவு: அரிய வகை கங்காரு குட்டி

1 mins read
d0702014-0403-41a0-8fdc-e203487134e8
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்துக்குப் புதிய வரவு ஒன்று கிடைத்துள்ளது. அரிய வகை 'குட்வெலஸ்' எனப்படும் மரத்தில் வாழும் கங்காரு வகையைச் சேர்ந்த மகாயா, நுப்பேலாவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி ஆண் குட்டி ஒன்று பிறந்தது. குட்டிக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

குட்டியைத் தனது வயிற்றில் உள்ள பையில் வைத்து தாய் கங்காரு பேணிக் காப்பதை நேற்று (ஜூலை 28) காண முடிந்தது.

அந்த கங்காரு தம்பதியின் முதல் குட்டி இது.

தாயின் கருவில் சுமார்40 நாட்கள் இருக்கும் இவ்வகை கங்காரு குட்டிகள் முற்றிலும் வளர்ச்சியடையாத நிலையில் பிரசவிக்கப்பட்டு தாயின் வயிற்றில் உள்ள பையில் பாதுகாக்கப்படும்.

அந்தப் பையில் முழுமையாக வளர்ச்சியடையும் குட்டிகள் சுமார் 8 மாதங்களுக்குப் பிறகுதான், பையிலிருந்து வெளியே வரும்.

கடந்த மாதம் 7ஆம் தேதி இந்தக் குட்டி, தாயின் வயிற்றிலிருக்கும் பைக்குள்ளிருந்து, தனது முடியில்லா தலையை நீட்டி, முதன் முதலாக உலகத்தை எட்டிப் பார்த்தது.

குட்டியின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியையும் விலங்கியல் தோட்டம் கவனித்து வருகிறது.

உலக அளவில் மொத்தம் 58 இத்தகைய கங்காருகள் மனிதக் கண்காணிப்பில் உள்ளன.