தேசிய தினம்: எட்டு இடங்களில் கொடியேற்றும் சடங்கு காலை 10.30 மணிக்கு பொது எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும்

தேசிய தினம்: எட்டு இடங்களில் கொடியேற்றும் சடங்கு காலை 10.30 மணிக்கு பொது எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும்

2 mins read
4665c4e3-3278-4763-a246-07ace6cef63c
-

தேசிய தினமான ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 10.30 மணிக்கு பாடாங் அரங்கில் தேசிய கொடி ஏற்றப்படும். அந்தப் பொறுப்பு முழுநேர தேசிய சேவையாளர் லிம் யூ ஜியேவுக்கு (படம்) வழங்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் தீவின் ஏழு இடங்களிலும் கொடி ஏற்றப்படும். கொவிட்-19 நோய்ப் பரவலால் பாதிப்பு ஏற்பட்டுள்ள வேளையில், ஏழு தொழில்துறைகளைப் பிரதிநிதிக்கும் இடங்கள் கொடியேற்றச் சடங்கிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

வீட்டிலிருந்தவாறே கொடி ஏற்றும் சடங்கில் சிங்கப்பூரர்கள் கலந்துகொள்ள நினைவூட்டும் விதமாக காலை 10.30 மணிக்கு பொது எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும்.

சுகாதாரப் பராமரிப்பைப் பிரதிநிதிக்கும் தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையம், கல்வியைப் பிரதிநிதிக்கும் நார்த் விஸ்தா உயர்நிலைப் பள்ளி, வீடமைப்பு மற்றும் சமூகத்தைப் பிரதிநிதிக்கும் கம்போங் அட்மிரல்ட்டி, போக்குவரத்தைப் பிரதிநிதிக்கும் சாங்கி விமான நிலையம், வேலைவாய்ப்பு மற்றும் திறன்களைப் பிரதிநிதிக்கும் பாய லேபாரின் வாழ்நாள் கற்றல் நிலையம் சமூக சேவையைப் பிரதிநிதிக்கும் புக்கிட் மேராவின் 'எனேப்ளிங் வில்லேஜ், வர்த்தக, தொழில்துறையைப் பிரதிநிதிக்கும் ஜூ கூனின் 'என்டியுசி ஃபேர்பிரைஸ் ஹப்' ஆகியவை அந்த ஏழு இடங்கள்.

அந்த ஏழு இடங்கள் ஒவ்வொன்றிலும் தேசிய தின நிகழ்ச்சி நடைபெறும். அந்தந்த தொழில்துறைக்கான அமைச்சர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வர்.

அதிபர் ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியன் லூங், தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், உள்துறை அமைச்சர் கா.சண்முகம் ஆகியோர் தேசிய கலைக்கூடத்தில் இருப்பர்.

போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் சாங்கி விமான நிலையத்திற்கும் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கம்போங் அட்மிரல்ட்டிக்கும் கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் நார்த் விஸ்தா உயர்நிலைப் பள்ளிக்கும் செல்வர்.

மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ வாழ்நாள் கற்றல் நிலையத்திற்கும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி 'எனேப்ளிங் வில்லேஜ்'ஜுக்கும் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்திற்கும் வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் என்டியுசி ஃபேர்பிரைஸ் ஹப்'புக்கும் செல்வர்.

ஒவ்வொரு தொழில்துறையையும் சேர்ந்த சுமார் 40 பிரதிநிதிகள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படும்.