‘உடற்குறை உள்ளோருக்கான வேலை ஆதரவு தொடரும்’

கொரோனா கிருமித்தொற்று காரணமாக வேலைக்கு ஆள் எடுப்பதை முதலாளிகள் பலர் குறைந்துள்ளனர்.

இதன் காரணமாக மற்ற சிங்கப்பூரர்களைப் போலவே உடற்குறையுள்ளோருக்கும் வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உடற்குறையுள்ளோருக்கான வேலை ஆதரவு தொடரும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சரும் சமூகச் சேவைகள் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பேற்கும் அமைச்சருமான திரு டெஸ்மண்ட் லீ நேற்று தெரிவித்தார்.

உடற்குறையுள்ளோருக்கு வசதியாக பயிற்சிகள் இணையம் மூலம் நடத்தப்படும் என்றும் அவர்களுக்குக் கூடுதல் படித்தொகையும் நிதியுதவியும் வழங்கப்படும் என்றார் அவர்.

கொரோனா கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிமிக்க காலகட்டத்தில் உடற்குறையுள்ளோருக்கும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் கூடுதல் சவால்கள் ஏற்பட்டுள்ளன.

எனவே, அவர்களுக்கு உதவும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. உணவு, தற்காலிக நிவாரணம், நிதி உதவி போன்றவை அவற்றில் அடங்கும்.

வேலைக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக அமைச்சர் லீ தெரிவித்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் அனைவரையும் உள்ளடக்கிய வர்த்தகக் கருத்தரங்கில் அமைச்சர் லீ நேற்று பேசினார். கருத்தரங்கிற்கு SG Enable ஏற்பாடு செய்திருந்தது.

உடற்குறையுள்ளோரையும் வேலையில் அமர்த்த முதலாளிகளை ஊக்குவிக்கும் நோக்குடன் இந்த மெய்நிகர் கருத்தரங்கு நடத்தப்பட்டது.

உடற்குறையுள்ளோரை உள்ளடக்கிய பணியிடங்கள்-புதிய வழக்கம் எனும் கருப்பொருளுடன் இவ்வாண்டின் கருத்தரங்கு நடத்தப்பட்டது. இணையம் மூலம் கற்றலுக்கு வகை செய்ய வகுப்புகளில் நடத்தப்படும் பயிற்சிகளை இணையத்தில் பதிவேற்றம் செய்து நடத்த பயிற்றுவிப்பாளர்களுக்கு SG Enable உதவியதாக அமைச்சர் லீ கூறினார்.

“கொவிட்-19 நெருக்கடிநிலையிலும் தொடர்ந்து வேலைக்கு ஆள் எடுக்கும் துறைகளில் உடற்குறையுள்ளோருக்கான வாய்ப்பு பற்றி நாங்கள் ஆராய்ந்தோம்.

“உதாரணத்துக்கு, நிர்வாகம் மற்றும் மனிதவளத் துறை, வங்கி மற்றும் நிதித் துறை, விவசாயத் தொழில்நுட்பம் மற்றும் நில வனப்புத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, துப்பரவுச் சேவைகள், அரசாங்கத் துறை ஆகியவற்றில் உடற்குறையுள்ளோருக்கான வேலை வாய்ப்புகளைப் பற்றி நாங்கள் ஆராய்ந்தோம்,” என்று அமைச்சர் லீ தெரிவித்தார்.

இந்தத் துறைகளில் இருக்கும் வேலை வாய்ப்புகளைக் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மெய்நிகர் வேலைச் சந்தையின்போது SG Enable முன்வைத்தது.

இவ்வாண்டு தாக்கல் செய்யப்பட்ட வரவுச்செலவுத் திட்டத்தின்போது உடற்குறையுள்ளோருக்கான வேலை வாய்ப்புத் திட்டங்கள் பற்றி விவரிக்கப்பட்டன.

அதையடுத்து, உடற்குறையுள்ளோருக்கான வேலை வாய்ப்புத் திட்டங்கள் அண்மையில் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் லீ குறிப்பிட்டுள்ளார். உதாரணத்துக்கு, பயிற்சி பெறும் உடற்குறையுள்ளோருக்கான படித்தொகை மணிக்கு $4.50லிருந்து $6க்கு உயர்த்தப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!