தேசிய முக அடையாளச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நேற்றிலிருந்து வங்கிக் கணக்கு வைத்திருப்போர் தங்கள் கைபேசிகளில் தங்களது முகத்தை 'ஸ்கேன்' செய்து இணைய வங்கிக் கணக்குக்கு விண்ணப்பம் செய்யலாம்.
பதிவு செய்யப்படும் முகத்தோற்றம் தேசிய பயோமெட்ரிக் தரவுத்தளத்துடன் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

