கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை இந்தியாவில் 16 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதுவரை சுமார் 35 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று ஒரேநாளில் 52,000க்கு அதிகமானோர் கொரோனா கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 15,84,000 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதேவேளையில் கொவிட்-19 நோயிலிருந்து இதுவரை சுமார் 10.20 லட்சம் நோயாளிகள் குணமடைந்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் சுமார் 5.28 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை இல்லாத அளவிற்கு நாடு முழுவதும் மரண விகிதம் 2.23 விழுக்காடாகக் குறைந்துள்ளது என சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பதிவான மரண விகிதத்தில் இதுவே ஆகக்குறைவான அளவாகும்.


