குப்பைத் தொட்டியில் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டதன் தொடர்பில் பெண் மீது குற்றச்சாட்டு

1 mins read
279af30a-3f64-4ac7-898a-149cf819f733
புதிதாக பிறந்த குழந்தையைக் கைவிட்டதாக 29 வயது இந்தோனீசிய மாது மீது இன்று (ஜூலை 30) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

புதிதாக பிறந்த குழந்தையைக் கைவிட்டதாக 29 வயது இந்தோனீசிய மாது மீது இன்று (ஜூலை 30) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

அப்பர் பாய லேபார் சாலை அருகே தாய் கெங் கார்டன்ஸ் எனும் தனியார் குடியிருப்புப் பேட்டையில் உள்ள பொருட்களை மறுசுழற்சி செய்யும் தொட்டியில் கடந்த திங்கட்கிழமை அந்தக் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது.

குற்றம் சுமத்தப்பட்ட அந்த மாது, அக்குழந்தையின் தாயார் எனக் கூறப்படுகிறது. திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் அவர் அக்குற்றத்தைப் புரிந்தார் எனக் கூறப்படுகிறது.

அந்த மாது நேற்று கைது செய்யப்பட்டார். அக்குழந்தையின் அடையாளத்தைப் பாதுகாக்க நீதிமன்ற உத்தரவின் காரணமாக அக்குழந்தையின் பெயர் வெளியிடப்படவில்லை.

இச்சம்பவம் குறித்து தாய் கெங் கார்டன்ஸ் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் திரு லியூ என்பவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்குப் பேட்டியளித்தார்.

திங்கட்கிழமை மாலை தமது குடும்பத்தினர் உணவருந்திய பிறகு குழந்தை அழும் சத்தம் கேட்டது குறித்து தமது மருமகன் தம்மிடம் கூறியதாக திரு லியூ சொன்னார்.

குறிப்புச் சொற்கள்
குழந்தை