புத்தாக்க நிதி: 9 இணையப் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு தலா $1 மில்லியன்

புத்தாக்க நிதி: 9 இணையப் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு தலா $1 மில்லியன்

1 mins read
21ec127e-1747-4302-ab9e-2c2accb15431
-

இணையப் பாதுகாப்புக்கான மென்பொருள் தயாரிக்கும் ஒன்பது நிறுவனங்களுக்கு தலா $1 மில்லியன் நிதி உதவி அளிக்கப்பட்டு உள்ளது.

சுகாதாரப் பராமரிப்பு, தற்காப்பு போன்ற சிங்கப்பூரின் முக்கியவத்துவம் வாய்ந்த துறைகளை இணைய ஊடுருவல்களில் இருந்து காப்பாற்றுவதற்கும் ஓட்டுநரில்லாத வாகனங்கள் போன்ற அறிவார்ந்த தேச திட்டங்களுக்காகவும் இணையப் பாதுகாப்பு முறைகளை உருவாக்க அவற்றுக்கு இத்தொகை வழங்கப்பட்டு உள்ளது.

சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு முகவை, சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட டிஎன்பி வென்சர்ஸ் என்னும் முதலீட்டு நிறுவனம் ஆகியன புத்தாக்கத் திறன் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதனைத் தொடர்ந்து 87 நிறுவனங்கள் விண்ணப்பங்களை அனுப்பி இருந்தன. அவற்றில் இருந்து ஒன்பது நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.இது தொடர்பாக முகவையின் தலைமை நிர்வாகி டேவிட் கோ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் பேசினார். புத்தாக்கத் தீர்வுகளைக் கொண்டிருக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களை சவால்களை எதிர்நோக்கும் நிறுவன கணினி கையாள்பவர்களோடு ஒன்றிணைப்பதற்கான முயற்சியே இந்த விண்ணப்ப அழைப்பு என்றார்.