தேசிய தினத்தை முன்னிட்டு, தேசிய அரும்பொருளகத்திலும் மற்ற அரும்பொருளகங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இன்று முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரையில் சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், இரவு 7.30இலிருந்து 11 மணி வரையில் ஒளிக்கோலம் பூணும். அதில் நம் நாடு மற்றும் நாட்டு மக்களின் வலிமையையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் விதமாக 'ஒன்றுபட்ட வலிமையான சிங்கப்பூர்' என்ற வாசகம் நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் ஒளிக்காட்சியாக இடம்பெறும்.
கதைநேரம், இசை நிகழ்ச்சி, குடும்பமாக பங்கேற்கும் நிகழ்வுகள், வண்ணம் தீட்டுதல் என பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அரும்பொருளகங்களின் இணையப் பக்கங்களில் நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். தேசிய அரும்பொருளகத்தின் நிகழ்ச்சிகளை https://www.nhb.gov.sg/ nationalmuseum/our-programmes/ programmes-list/ndnms2020?sc_ lang=en என்ற இணையப் பக்கத்தில் காணலாம்.

