ஹஜ்ஜுப் பெருநாளில் 6,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து

ஹஜ்ஜுப் பெருநாளில் 6,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து

1 mins read
9b0d1a51-3f5c-4b29-9d83-33d157cd66fd
-

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு இன்று சுமார் 6,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. அந்த ஊழியர்கள், தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்டுள்ள 78 தொழிற்சாலை இடங்களில் தங்கி இருப்பவர்கள். வெளிநாட்டு ஊழியர்கள் தங்க ளுடைய நாடுகளைவிட்டு இங்கு வந்து செல்வசெழிப்புமிக்க சிங்கப் பூரை உருவாக்க உதவி வருவதை அங்கீகரிக்கும் வகையில் அறப் பணி அமைப்புகள் ஒன்று சேர்ந்து அந்த ஊழியர்களுக்குச் சிறப்பு உணவை வழங்கியதாக 'ரஹ்மத் தான் லில் அலாமின் அறநிறுவனம்' என்ற அமைப்பு தெரிவித்தது.

கொவிட்-19 காரணமாக வழக்கமான ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட்டு இருப்ப தாகத் தெரிவித்த அந்த அறநிறுவனம், இந்த உணவு, ஹஜ்ஜுப் பெருநாளின்போது தங்கள் தாயகத்தைவிட்டு தொலைதூரம் வந்து சிங்கப்பூரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டது. கொவிட்-19 சூழலில் அத்தகைய ஊழியர்கள் தங்கள் விடுதிகளில் சமைக்க முடியாத சூழல் இருப்பதை அறநிறுவனம் சுட்டியது. இந்த அறநிறுவனம், முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் ஆதரவுடன் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவு வழங்கி அவர்களும் ஹஜ் ஜுப் பெருநாளில் மகிழ்ச்சியாக இருக்க உதவி உள்ளது.