கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில்: பிரதமர் நம்பிக்கை

கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் (எச்எஸ்ஆர்) தொடர்பான பேச்சுகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு முடிவில் அந்தத் திட்டம் தொடர்பில் ஒரு முடிவு ஏற்படும் என்று நம்பப்படுவதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார். இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட அந்த ரயில் திட்டம் தொடர்பான பேச்சுகள் அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் பலன்களை ஏற்படுத்தும் என்பதே நம்பிக்கை என்று திரு லீ கூறினார்.

மலேசியா சில மாற்றங்களை முன்வைத்துள்ளதாகவும் அவற்றை சிங்கப்பூர் மிகக் கவனமாக ஆராய்ந்து வருவதாகவும் கூறிய திரு லீ, அந்த யோசனைகள் பற்றி மலேசியாவுடன் மேலும் விவாதிக் கப்போவதாகவும் கூறினார். ஜோகூர் பாரு-சிங்கப்பூர் துரித ரயில் சேவை (ஆர்டிஎஸ்) திட்டம் அதிகாரபூர்வமான முறையில் வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது. கடற்பாலத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரு லீ, பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

சிங்கப்பூரையும் கோலாலம்பூரையும் இணைக்கும் அதிவேக ரயில் திட்டம் காரணமாக இரு நாடுக ளுக்கும் இடையில் போக்குவரத்து தொடர்பு மேம்படும். இதனால் வர்த் தகம், தொழில் பெருகும். உறவுகள் இன்னும் அணுக்கமடையும் என்றார் திரு லீ. இதுவே அந்தத் திட்டத் தின் அடிப்படை சிந்தனை என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த 350 கி.மீ. நீள ரயில் திட்டம், கோலாலம்பூருக்கும் சிங்கப்பூருக்கும் இடைப்பட்ட பயண நேரத்தை 90 நிமிடங்களாகக் குறைத்துவிடும்.

கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டத்தைக் கைவிட்டுவிட மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது தொடக் கத்தில் விரும்பினார். இருந்தாலும் அவருடைய தலைமையின்கீழ் செயல்பட்ட அரசு, அத்திட்ட கட்டுமானத்தைத் தாமதப் படுத்த விரும்புவதாக பின்னர் தெரி வித்தது. பிறகு அந்த ரயில் திட்டம் மே 31 வரை இரண்டாண்டு காலம் கிடப்பில் போடப்பட்டது. சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சராக இருந்த கோ பூன் வான் இருதரப்பு ஒத்துழைப்பைக் கருத்தில் கொண்டு அந்தத் திட் டத்திற்கான காலக்கெடுவை இந்த ஆண்டு முடிவு வரை ஏழு மாத காலத்திற்கு நீட்டிக்க இணக்கம் தெரிவித்தார். இதனிடையே, கடற்பால நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங், கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டத்தை மறுபடியும் தொடங்கும் சாத்தியம் பற்றி மலேசியாவின் மூத்த அமைச்சர் அஸ்மின் அலியுடன் தான் பேச்சு நடத்தியதாகக் கூறினார்.

ஜோகூர்பாரு-சிங்கப்பூர் துரித ரயில் திட்ட உடன்பாடு ஏற்பட்டு இருப்பதைப் போலவே கோலாலம் பூரையும் சிங்கப்பூரையும் இணைக் கும் அதிவேக ரயில் திட்டம் தொடர்பான விவரங்கள் இந்த ஆண்டு முடிவில் பூர்த்தியாகிவிடும் என்று தான் நம்புவதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் தொடர்பில் இரு தரப்புகளும் கடுமையாகப் பாடுபட்டு வருவதாக அவர் கூறினார

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!