மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தீவின் பல்வேறு இடங்களில் மேற்கொண்ட சோதனையில் 11,118 கிராம் ஹெராயின், 30 எக்ஸ்டசி மாத்தி ரைகள், ஒரு ஏராமின்-5 மாத் திரை, ஏறக்குறைய 101 கிராம் ஐஸ் ஆகிய போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன
அவற்றின் மதிப்பு $800,000க்கும் அதிகம் என்று போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது. $18,400 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
நேற்று பிற்பகலில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் போதைப் பொருள் தொடர்பான நடவடிக் கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 28 வயதுக்கும் 62 வயதுக்கும் இடைப்பட்ட 10 சிங்கப்பூரர்கள் கைதுசெய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 9 பேர் ஆண்கள், ஒருவர் பெண்.

