பள்ளிவாசல்களில் பாதுகாப்பு இடைவெளியுடன் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

பாதுகாப்பு இடைவெளி விதிமுறை காரணமாக பள்ளிவாசல்களில் நேற்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடத்த குறைவானவர்களே அனுமதிக்கப் பட்டனர். 65 பள்ளிவாசல்களில் இடம் பெற்ற சிறப்புத் தொழுகையில் மொத்தம் 8,750 பேர் பங்கேற்றனர். அமர்வுக்கு 50 பேர் என்ற வகையில் பெரும்பாலான பள்ளிவாசல்களில் மூன்று தொழுகை அமர்வுகள் இடம் பெற்றன. ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் தொழுகைப் பாய்களும் பொது இடங்களும் சுத்தம் செய்யப்பட்டன. ஜூரோங் வெஸ்ட் மாரோஃப் பள்ளிவாசலில் (படம்) சிறப்பு சமயச் சொற்பொழிவு நிகழ்த்திய முஃப்தி டாக்டர் நசீருதின் முகம்மது நசீர், இந்தக் காலகட்டத்தில் உதவியும் ஆதரவும் தேவைப்படுவோருக்குக் கைகொடுக்க வேண்டும் என்று முஸ்லிம்களைக் கேட்டுக்கொண்டார். இவ்வாண்டு குர்பான் சடங்கு இங்கு இடம்பெறவில்லை.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்