எல்லாப் பிரிவுகளிலும் ஏற்றம் கண்ட ‘சிஓஇ’ கட்டணம்

அண்மைய ஏலக்குத்தகையில் எல்லாப் பிரிவுகளிலும் வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணம் அதிகரித்து இருக்கிறது.

இரு வாரங்களுக்குமுன் நடந்த ஏலக்குத்தகையில் 1,600சிசி வரையிலான கார்களுக்கான சிஓஇ கட்டணம் $32,699ஆக முடிந்தது. நேற்றைய ஏலக்குத்தகையில் அது $33,000ஆக உயர்ந்தது. அதுபோல, 1,600சிசிக்கு மேற்பட்ட கார்களுக்கான சிஓஇ கட்டணம் $35,001லிருந்து $37,102ஆக ஏற்றம் கண்டது.

பொதுப் பிரிவு வாகனங்களுக்கான சிஓஇ கட்டணமும் $35,001 லிருந்து $36,502ஆக உயர்ந்தது.

வர்த்தகப் பிரிவு வாகனங்களுக்கான சிஓஇ கட்டணத்தில் ஆகக் குறைவான உயர்வு காணப்பட்டது. சென்ற ஏலக்குத்தகையில் $23,888ஆக இருந்த அக்கட்டணம் இம்முறை $24,100ஆகக் கூடியது.

மோட்டார்சைக்கிள்களுக்கான சிஓஇ கட்டணம் $6,510லிருந்து $7,701ஆக அதிகரித்தது.

ஆகஸ்ட்-அக்டோபர் காலத்திற்கான வாகன விநியோகம் 29% குறைக்கப்பட்டதே சிஓஇ கட்டண அதிகரிப்புக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon