அத்தியாவசிய பொருட்கள் தடையில்லா விநியோகம் - 11 நாடுகள் சம்மதம்

மோன்டெரே: கொவிட்-19 சூழலில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தங்குத் தடையின்றி கிடைப்பதற்கு 11 நாடுகளை உள்ளடக்கிய டிரான்ஸ் பசிபிக் வட்டார நாடுகள் உறுதி தெரிவித்துள்ளன.

“வெளிப்படையான முறையில் விநியோகம் தொடர நாங்கள் அனைவரும் கடப்பாடு கொண்டுள்ளோம். உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுக்க இது மிகவும் முக்கியம். உலகளாவிய உணவு விநியோகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்,” என்று 11 நாடுகளின் கூட்டறிக்கை வலியுறுத்தியது.

டிரான்ஸ் பசிபிக் பங்காளித்துவ விரிவான முன்னேற்ற உடன்பாட்டில் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா, கனடா, ஜப்பான், நியூசிலாந்து, பெரு, மெக்சிகோ, சிலி, புருணை, வியட்னாம் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த டிரான்ஸ் பசிபிக் வட்டார நாடுகளில் சுமார் 495 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவற்றின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 13.5 டிரில்லியன் டாலர் ஆகும்.

கிருமித்தொற்று சூழலில் மருந்துகள், மருத்துவ சாதனங்கள் ஆகியவை தடையின்றி கிடைக்க 11 நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் சிங்கப் பூரின் வர்த்தக, தொழில் அமைச் சரான சான் சுன் சிங் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் கிருமிப்பரவல் சூழலில் நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவு வலுப்படுவது மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டு உள்ளார். வர்த்தகங்களும் ஊழியர் களும் மற்ற நாடுகளில் உள்ள வாய்ப்புகளைக் கண்டறிய பொரு ளியல் ஒருங்கிணைப்பு அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon