மதுபானம் குடித்துவிட்டு வீடு திரும்பிய யாப் பெ சிங் (34), தன் 68 வயது தந்தையைத் தாக்கியதன் தொடர்பில் நேற்று யாப்புக்கு ஐந்து மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மார்ச் 25ஆம் தேதியன்று நள்ளிரவு நேரத்தில் மது குடித்துவிட்டு வீடு திரும்பிய யாப், காரணமில்லாமல் திரு யாப் இங் ஹுவாட்டை நோக்கிக் கத்தியதாகவும் இருவருக்கும் சண்டை மூண்டதாகவும் கூறப்பட்டது. தந்தையின் இடது கண்ணை யாப் மூன்று முறை குத்திக் காயப்படுத்தியதாக கூறப்பட்டது. யாப்பின் சகோதரி போலிசாருக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்து யாப் கைது செய்யப்பட்டார். வேலை இல்லாத யாப் உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் உள்ள அவர்களது வீட்டில் தன் பெற்றோர், மனைவி, ஐந்து பிள்ளைகளுடன் வசித்ததாகவும் யாப் அளவுக்கு அதிகமாக மதுபானம் குடிக்கும் பழக்கம் உடையவர் என்றும் அரசாங்க வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.
மதுபானம் குடித்துவிட்டு தந்தையை தாக்கிய ஆடவருக்கு சிறை
1 mins read
-

