ஏறக்குறைய எல்லா வெளிநாட்டு ஊழியர்களுக்கும் கொவிட்-19 தொற்று இல்லை என்பது உறுதியாகும்

சிங்கப்பூரில் ஏறக்குறைய எல்லா வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இன்று வெள்ளிக்கிழமைக்குள் கொவிட்-19 தொற்று இல்லை என்பது உறுதியாகும் என்றும் அவர்கள் இம்மாத இறுதியில் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விளைவாக பல கட்டுமானப் பணிகளும் திட்டங்களும் விரைவில் தொடங்குவதற்கு வழி ஏற்படும் என்று கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று தெரிவித்தார்.

இருந்தாலும் இன்னமும் ஊழியர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதைச் சுட்டிய அவர், அவர் களுக்குப் பரிசோதனைகள் நடந்து வரும் நிலையில் அடுத்த சில வாரங்களில் கொவிட்-19 தொற்று எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக இருந்து வரும் என்றும் குறிப்பிட்டார்.
கொவிட்-19 முறியடிப்பு தொடர்பில் அமைக்கப்பட்ட சிறப்புப் பணிக்குழுவின் இணைத் தலைவரான திரு வோங், கூடுமான வரையில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு விரைவாக பரிசோதனைகள் நடத்தப்பட்டு கிருமித்தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் வேலைக்குத் திரும்ப அனுமதிக்க அதிகாரிகள் முயன்று வருவதாகக் கூறினார்.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் உள்ள ஊழியர்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என் பதையும் அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதையும்  உறுதிப்படுத்துவதோடு மட்டுமின்றி, ஊழியர்கள் கூடுமானவரையில் விரைவாக வேலைக்குத் திரும்ப வேண்டும் என்றும் தாம் விரும்புவதாக திரு வோங் தெரிவித்தார்.

முதலாளிகளும் ஒப்பந்தக்காரர்களும் ஊழியர்கள் வேலைக்குத் திரும்புவதற்கு முன்பாக தேவையான பாதுகாப்பு நடவடிக்கை      களைக் கூடுமான வரையில் அமல் படுத்துவதில் பங்காற்ற வேண்டும் என்று திரு வோங் வலியுறுத்தினார்.
வேலையிடத்திற்கும் தங்கும் இடத்திற்கும் இடையில் நேரடி போக்குவரத்து வசதியை முதலாளி கள் ஏற்படுத்தித் தர வேண்டும்.  
வேலையிடங்களில் TraceTogether மற்றும் SafeEntry வருகைப் பதிவுத் தொழில்நுட்பங் களைப் பொருத்த வேண்டும். 
மீண்டும் கொவிட்-19 தலைதூக்குவதைத் தடுக்கும் வகையில் ஊழியர்களைப் பல்வேறு வேலையிடங்களுக்கு மாற்றி அனுப்பக் கூடாது.  
ஒரு திட்டத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் வெவ்வேறு தங்கும் விடுதிகளில் அல்லாமல் ஒரே விடுதியில் தங்க வைக்கப்பட வேண்டும்.

வேலை மீண்டும் தொடங்கிய பிறகும் பாதுகாப்பு நடவடிக்கைகள் நடப்பில் இருந்து வரவேண்டும் என்றும் தங்கும் விடுதிகளில் உள்ள ஊழியர்கள் அனைவருக்கும் 14 நாட்களுக்கு ஒரு முறை இடை விடாமல் பரிசோதனை நடத்தப்படும் என்றும் திரு வோங் தெரிவித்தார்.
இன்னமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் மட்டுமே கிருமித்தொற்றில் இருந்து விடுவிக்கப்பட்டதாகக் கருதப்படமாட்டர் என்று நேற்று நடந்த மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் திரு வோங் குறிப்பிட்டார்.சென்ற மாத நிலவரப்படி 28,000 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். 

இவர்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களில் பரிசோதனை நடத்தப்படும். தொற்று இல்லை என்பது தெரிய வந்தால் தனிமை இடங்களில் இருந்து அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon