சுடச் சுடச் செய்திகள்

4 வயது குழந்தை கொலை: சந்தேக நபர்களின் காவல் நீட்டிப்பு

நான்கு வயது மேகன் குங் யு வாயைக் கொன்று எரித்ததன் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூவரையும் மேலும் ஒரு வாரம் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாண்டு பிப்ரவரி மாதம் குழந்தையின் தாயாரான ஃபூ லி பிங் (24) மற்றும் வோங் ஷி சியாங் (33) என்ற ஓர் ஆடவர் மீது குழந்தையைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. அத்துடன் குழந்தையின் உடலை ஓர் உலோகக் கலனில் இட்டு எரிக்க உதவியதாக மூன்றாவது நபரான நொவெல் சுவா ருவொஷி (30) மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுவாவை மேலும் ஒரு வாரம் தடுப்புக் காவலில் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் அவரது வழக்கறிஞர் திரு தங்கவேலு. அத்துடன் தம் கட்சிக்காரர் மற்ற இருவரைப் போல் கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கவில்லை என்று கூறி, கொலை வழக்கு விசாரணைகள் நடக்கும் உச்ச நீதிமன்றத்திற்கு சுவாவின் வழக்கு வருவது குறித்தும் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும், வழக்குக்கான ஆதாரங்களைத் திரட்ட, துணை அரசாங்க வழக்கறிஞர் விண்ணப்பித்தபடி மேலும் ஒரு 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon