வேலைக்கு ஆள் எடுப்பதில் பாகுபாடு: கண்காணிப்பு வளையத்தில் மேலும் 47 நிறுவனங்கள்

வேலை நியமனத்தில் பாகுபாடு காட்டும் போக்கு தொடர்பில் மேலும் 47 முதலாளிகள், நியாயப் பரிசீலனைக் கட்டமைப்பின் கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் நிதி மற்றும் நிபுணத்துவச் சேவைத் துறைகளைச் சார்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

பட்டியலில் முன்னரே இருந்த 1,200 முதலாளிகளுடன் இந்த 47 பேரும் சேர்க்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் வேலை அனுமதி அட்டைக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் கூர்ந்து ஆராயப்படும்.

இதன் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்காத நிறுவனங்களுக்குக் கிடைத்து வரும் வேலை அனுமதி அட்டை சலுகைகள் குறைக்கப்படும்.

புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள 47 நிறுவனங்களில், 30 நிறுவனங்கள் நிதி மற்றும் நிபுணத்துவச் சேவைத் துறைகளைச் சார்ந்தவை.

எஞ்சிய நிறுவனங்கள் நிர்வாக ஆதரவுச் சேவைகள், உற்பத்தி மற்றும் கல்வித் துறைகளைச் சார்ந்தவை. பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களின் கலவை இந்த 47 நிறுவனங்களில் அடங்கியுள்ளதாகவும் கூறப்பட்டது. இவற்றில் ஆகப் பெரிய நிறுவனத்தில் கிட்டத்தட்ட 2,000 பேர் பணிபுரிகின்றனர். இவர்கள் வல்லுநர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்நுணுக்கர்களாக (பிஎம்இடி) உள்ளனர்.

உள்ளூர்வாசிகளுக்கு வேலை கொடுப்பதில் இந்நிறுவனங்கள் ஆதரவு காட்டியிருந்தாலும் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் வெளிநாட்டினர் அதிகமாக இருந்ததாக அமைச்சு கூறியது.

இதன் பொருட்டு இந்நிறுவனங்கள் கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்தது.

உதாரணத்திற்கு 18 நிறுவனங்களில் தங்களின் ‘பிஎம்இடி’ ஊழியர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் வெளிநாட்டவர்களாக இருந்தனர். அத்துடன் நிதி மற்றும் நிபுணத்துவச் சேவைத் துறைகளைச் சேர்ந்த 30 நிறுவனங்களில் ஒரு குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்த ‘பிஎம்இடி’ ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர்.

“வேலைக்கு ஆள் எடுப்பதில் நாடு அடிப்படையில் உள்ளூர்வாசிகளுக்கு எதிராக எந்த ஒரு பாரபட்சமும் இல்லை என்பதை உறுதிசெய்ய நிறுவனங்களை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணிப்போம். அவ்வாறு பாரபட்சம் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாத போக்கு. நியாயமான, தகுதி அடிப்படையிலான வேலை நியமனத்துக்கு இது எதிரானது,” என்றது அமைச்சு.

மேம்படுத்தப்பட்ட நியாயப் பரிசீலனைக் கட்டமைப்பின் கீழ் முதலாளிகள் வேலையிடத்தில் பாகுபாடு காட்டுவது நிரூபிக்கப்பட்டால், அங்கு தற்போதுள்ள ஊழியர்களின் வேலை அட்டைகளைப் புதுப்பிக்க முடியாது. தொடர்ந்து இப்போக்கைக் கடைப்பிடிக்கும் முதலாளிகள், குறைந்தது 12 மாதங்களுக்குப் புதிய வேலை அனுமதி அட்டைகளுக்கு விண்ணப்பிக்க இயலாது. இதற்கான தடை 24 மாதங்கள் வரை நீடிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

2016ஆம் ஆண்டிலிருந்து கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட 190 நிதி மற்றும் நிபுணத்துவச் சேவைத் துறை நிறுவனங்களில், வேலை நியமனப் போக்கை மாற்றிக்கொண்ட 100 நிறுவனங்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!