டெங்கியால் இளம் வயதினர் மரணமடைவது அரிதானது: மருத்துவப் பேராசிரியர் கருத்து

1 mins read
91eeea2d-819e-45c3-b826-2e58ac221363
டெங்கிப் பரவல் குழுமங்களில் ஒன்று. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இவ்­வாண்டு டெங்­கிச் சம்­ப­வங்­க­ளால் உயி­ரி­ழந்த ஆக இளை­ய­வர் 25 வயது ஆட­வர் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்து உள்­ளது. கடந்த ஞாயிற்­றுக்­கிழமை வரை டெங்­கி­யால் 20 பேர் உயி­ரி­ழந்­த­தாக நேற்று முன்­தி­னம் அமைச்சு குறிப்­பிட்­டது. மாண்­ட­வர்­கள் 25க்கும் 92க்கும் இடைப்­பட்ட வய­தி­னர் என்­றும் உயி­ரி­ழந்­தோ­ரில் 18 பேர் டெங்கி பர­வல் குழு­மங்­களில் வேலை செய்­த­னர் அல்­லது வசித்து வந்­த­னர் என்­றது அமைச்சு. சிங்­கப்­பூ­ரில் இது­வரை 391 டெங்­கிப் பர­வல் குழு­மங்­கள் கண்­ட­றி­யப்­பட்டு உள்­ளன.

டெங்கி நோயால் இளை­யர்­கள் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­படு­வது வழக்­க­மான ஒன்­றல்ல என்று டியுக்-என்­யு­எஸ் மருத்­து­வக் கழக பேரா­சி­ரி­யர் ஊய் எங் இயோங் தெரி­வித்­தள்­ளார்.

"ஐந்து முதல் ஒன்­பது அல்­லது பத்து வரை­யில் குழந்­தை­களாக இருக்­கும்­போது இந்­நோய்த் தொற்­றுக்­கான வாய்ப்பு அதி­கம் என்­ற­போ­தி­லும் இளை­யர்­க­ளாக அவர்­கள் வளர்ந்த பின்­னர் அந்த நிலை­மை­யில் தலை­கீழ் மாற்­றம் ஏற்­படும்," என்­றார் அவர்.

என­வே­தான் இளை­யர் டெங்கி ஆபத்­தில் சிக்­கு­வது பொது­வாக நடை­பெ­றக்­கூ­டி­ய­தல்ல என்று நான் கூறு­கி­றேன். ஆயி­னும் ஆபத்­தை­யும் நான் குறைத்து மதிப்­பி­ட­வில்லை என்­றும் திரு ஊய் கூறி­னார்.

இது பற்றி கருத்­து­ரைத்த சுகா­தார அமைச்சு, "இளை­யர்­கள் டெங்­கி­யின் பாதிப்­புக்கு ஆளா­வது வழக்­கத்­திற்கு மாறா­னது என்ற­போ­தி­லும் இதற்கு முன்­னர் 12 மற்­றும் அதற்கு உட்­பட்ட வய­து­டை­யோர் மாண்ட சம்­ப­வங்­கள் நிகழ்ந்­துள்­ளன," என்­றது. 2016ஆம் ஆண்­டில் அரி­தாக 11 வயது பையன் டெங்கி நோயால் மரண­முற்­றார்.