தேசிய தினத்­தன்று இரு முறை எச்சரிக்கை ஒலி

தேசிய தினத்­தன்று இரு முறை எச்சரிக்கை ஒலி

1 mins read
b6ac10e4-f178-4d6d-9a9b-a5ae5c5edf97
படம்: இபிஏ -

தேசிய தினத்­தன்று பொது எச்­ச­ரிக்கை ஒலி இரு­முறை ஒலிக்­கும். தீவெங்­கும் பல இடங்­களில் தேசிய கொடி ஏற்­றப்­படும் நேரத்­தில் காலை 10.30 மணிக்கு முதல் முறை­யும் இரவு 8.20 மணிக்கு இரண்­டா­வது முறை­யும் எச்­ச­ரிக்கை ஒலி எழுப்­பப்­படும். சுமார் 20 விநா­டி­கள் ஒலி நீடிக்­கும்.

இரண்­டா­வது முறை­ எழுப்­பப்­படும் ஒலி சிங்­கப்­பூ­ரர்­கள் அனை­வ­ரும் எழுந்து நின்று தேசிய பற்­று­றுதி எடுத்­துக்­கொள்வதற்­கா­னது. பொது எச்­ச­ரிக்கை ஒலி எழுப்­பப்­படும் நேரங்­களில் மக்­கள் குழப்­ப­ம­டைய வேண்­டாம் என சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை கூறியுள்ளது.