சிங்கப்பூர் பொருளியல் 2021ல் 7% வளர்ச்சி பெறும்: ஆய்வு

சிங்கப்பூர் பொருளியல் அடுத்த ஆண்டு வலுவான மீட்சிப் பாதையில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியான்+3 பெருநிலைப் பொருளியல் ஆய்வு அலுவலகம் (அம்ரோ) நேற்று வெளியிட்ட அறிக்கை இதனை முன்னுரைக்கிறது.

நாட்டின் பொருளியல் வளர்ச்சி அடுத்த ஆண்டு 7 விழுக்காடு அதிகரிக்கக்கூடும். இவ்வாண்டு பொருளியல் வளர்ச்சி 6 விழுக்காடு குறையும் என அது கூறியது.

இவ்வாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி முன்னுரைப்பு கீழ்நோக்கி திருத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட முன்னுரைப்பின்படி வளர்ச்சி விகிதம் 0.8 விழுக்காடாக இருந்தது.

அம்ரோவின் தலைமைப் பொருளியல் நிபுணரான டாக்டர் ஹோ ஈ கோர், இவ்வாண்டு பிற்பாதியில் சிங்கப்பூர் பொருளியல் மீட்சி காணும் என்று கூறினார். மற்ற தொழில்துறைகளைவிட சிறப்பாக செயல்பட்டு வரும் உற்பத்தி, நிதி சேவைத் துறைகள் பொருளியல் மீட்சிக்கு வலுசேர்க்கும் என்றார் அவர்.

கூடுதலான வெளிநாட்டு ஊழியர்கள் கொரோனா கிருமித்தொற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வரும் வேளையில், இவ்வாண்டு பிற்பாதியில் கட்டுமானத் துறையும் பொருளியல் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“இவ்வாண்டு பிற்பாதியிலும் அடுத்த ஆண்டிலும் பொருளியல் வலுவான மீட்சி காணும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

“எனினும், கொரோனா கிருமிக்கு எதிரான தடுப்பூசி கிடைக்கும் வரை சுற்றுப்பயணத் துறை, விருந்தோம்பல் துறை போன்றவை தொடர்ந்து பாதிக்கப்பட்டிருக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகுதான் இந்தத் துறைகள் மீட்சிப் பாதையில் செல்லும்,” என்று டாக்டர் ஹோ விவரித்தார்.

சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இவ்வாண்டு 4 முதல் 7 விழுக்காடு வரை சுருங்கும் என வர்த்தக, தொழில் அமைச்சு எதிர்பார்க்கிறது.

ஆசியான்+3 வட்டாரத்தில் 14 நாடுகள் இடம்பெறுகின்றன. அவற்றில் ஒன்பது நாடுகளில் இவ்வாண்டு பொருளியல் சுருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா, புருணை, லாவோஸ், மியன்மார், வியட்னாம் ஆகிய எஞ்சிய ஐந்து நாடுகளில் வளர்ச்சி வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

கொரோனா கிருமிப் பரவல் சூழலைப் பொறுத்து நாடுகளின் பொருளியல் வளர்ச்சியை அம்ரோ முன்னுரைக்கிறது.

எனினும், வட்டார அளவிலும் உலகின் மற்ற பகுதிகளிலும் கிருமித்தொற்று அதிகரித்து இருப்பது மக்களிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. பொருளியல் மீண்டும் முடக்கப்படும் சாத்தியமும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

அம்ரோவின் வட்டாரக் கண்காணிப்புப் பிரிவுத் தலைவரான டாக்டர் லி லியன் ஓங், பொருளியலை மீட்க கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதிலும் மற்றொரு கிருமித்தொற்று அலை எழும் அபாயத்தைச் சமாளிப்பதிலும் சமநிலை காண்பதே நாட்டுத் தலைவர்கள் எதிர்நோக்கும் மிகப்பெரிய சவால் என்று கருத்துரைத்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!