மூன்று வயது மகனைப் பிரம்பால் அடித்த தந்தைக்கு சிறைத் தண்டனை

மூன்று வயது மகனைப் பிரம்பால் அடித்த தந்தைக்கு சிறைத் தண்டனை

1 mins read
7ea249a9-3a9c-484a-8959-25942e9ab574
-

இரண்டு வாரத்துக்கு ஒருமுறை தமது மூன்று வயதாகும் மகனைப் பிரம்பால் அடித்த தளவாட ஒருங்கிணைப்பாளருக்கு ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தமக்கு மனவுளைச்சல் ஏற்படும்போதெல்லாம் அந்த 33 ஆடவர் தமது மகனை அடித்துத் துன்புறுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அந்தச் சிறுவனின் அடையாளத்தைக் காக்க ஆடவரின் பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை சிறுவன் கொடுமைப்படுத்தப்பட்டான்.