இழப்பீட்டுச் சட்டம்: புதிய நிபந்தனைகள் ஒத்திவைப்பு

இழப்பீட்டுச் சட்டம்: புதிய நிபந்தனைகள் ஒத்திவைப்பு

1 mins read
6bb81ebd-5365-495b-953f-13e6efb23dc2
-

வேலையிட காயங்களுக்கான புதிய இழப்பீட்டுச் சட்டம் சென்ற ஆண்டு செப்டம்பரில் இயற்றப்பட்டது. பாதுகாப்பு காப்புறுதிகளை வழங்கும் நிறுவனங்களை மனிதவள அமைச்சு நியமிக்க வேண்டும் என்று அந்தச் சட்டம் கூறுகிறது. இப்புதிய நிபந்தனைகள் இவ்வாண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நடப்புக்கு வர இருந்தன. கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக காப்புறுதி நிறுவனங்கள் ஆயத்தமாக முடியவில்லை. ஆகையால் நிபந்தனைகள் நடப்புக்கு வரும் காலத்தை ஒத்திவைக்கும்படி பொது காப்புறுதிச் சங்கம் வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து மனிதவள அமைச்சு, புதிய ஒழுங்குமுறை ஏற்பாட்டை 2021ஆம் ஆண்டு ஜனவரி 1 வரை ஒத்திவைக்க இணங்கி இருக்கிறது.