சிங்கப்பூரர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்வதைக் காண்பது தமக்கு மனநிறைவை அளிப்பதாக அதிபர் ஹலிமா யாக்கோப் தமது தேசிய தினச் செய்தியில் கூறியுள்ளார். முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இவ்வாண்டின் தேசிய தினம் அதிகம் வேறுபட்டு உள்ளது. இருப்பினும், அனைவரும் ஆர்வத்துடன் அந்நாளுக்காக காத்திருப்பார்கள் என்று தாம் நம்புவதாக அவர் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் 55வது பிறந்தநாள் என்பது ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுவதால் கொண்டாட்டம் இவ்வாண்டு பெருமளவில் நடைபெற வேண்டியது. ஆனால் உலகநாடுகளைத் தொடர்ந்து உலுக்கி வரும் கொவிட்-19 தொற்றால் கொண்டாட்டம் நடைபெறுவதெற்கென சில கட்டுப்பாடுகள் அமைந்து விட்டன.
சுகாதாரப் பராமரிப்பு, பொருளியல், வேலை, சமூக நடவடிக்கைகள் என வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சமும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து அதிபர் ஹலிமா பேசினார்.
இந்த நெருக்கடிக்கு எதிராகப் போராட, கடந்தாண்டுகளில் சிங்கப்பூர் ஒரு தேசமாக அடைந்துள்ள முன்னேற்றமே கைகொடுத்துள்ளது என்று அவர் பகிர்ந்துகொண்டார்.
அத்துடன் பலத்தையும் வளங் களையும் திரட்டிக்கொண்டு நெருக் கடிக்காலச் செயல்பாட்டைத் தயார் படுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட திருவாட்டி ஹலிமா, இந்த இக்கட்டான காலகட்டத்தில் மக்கள் ஒன்று திரண்டு வந்து தங்களின் வளங் களைக் கொண்டு பிறருக்கு உதவி வருவது தமக்கு உற்சாகத்தை அளிப்பதாக தெரிவித்தார். நிறு வனங்கள், ஊழியர்கள், குடும்பங்கள் ஆகியவற்றுக்கு சவால்கள் காத்திருப்பதாக எச்சரித்த அவர், தனிப்பட்ட மற்றும் கூட்டு முயற்சிகள் இச்சவால்களை எதிர்கொள்ள தேவைப்படும் என்றார்.
இதற்கிடையே நேற்றுக் காலை மெய்நிகராக நடைபெற்ற தற்காப்பு அமைச்சின் தேசிய தினப் பற்றுறுதிச் சடங்கில் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் சுமார் 3,000 தற்காப்பு அமைச்சு மற்றும் சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரிகளுடன் நாட்டுப் பற்றுறுதியை எடுத்துக்கொண்டதுடன் தேசிய கீதத்தைப் பாடினார். வெளிநாட்டுப் பயிற்சிகளுக்கு அனுப்பப்பட்ட பிரிவு கள் உட்பட அனைத்து ஆயுதப் படைப் பிரிவுகளும் தேசிய தினத்தைக் கொண்டாட, பற்றுறுதிச் சடங்குகள் நடத்தப்படும் என்று தற்காப்பு அமைச்சு கூறியது.

