தேசிய தின விருதுகளைப் பெற்ற இந்தியர்கள்

2 mins read

தேசிய தினத்தை முன்னிட்டு நாட்டிற்கும் சமூகத்திற்கும் அரும்பணியாற்றியவர்களுக்கு தேசிய தின விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. விருது பெற்றவர்களில் இந்திய சமூகத்தைச் சேர்ந்த பலர் இருக்கின்றனர். அவர்களில் சிலரைக் காணலாம்.

வெளியுறவு அமைச்சை சேர்ந்த திருமதி ஜெயலட்சுமி மொஹி

தீனுக்குப் பொதுச் சேவை நட்சத்திர (பார்) விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் சிங்கப்பூரில் இருந்தபடியே ஃபின்லாந்துக்கான தூதராகப் பணியாற்றுகிறார். உள்துறை அமைச்சின் திரு லட்சு

மணன் சீனிவாசகனுக்கும் பொதுச் சேவை நட்சத்திர (பார்) விருது வழங்கப்பட்டது. இவர் சிங்கப்பூர் சாலைப் பாதுகாப்பு மன்றத்தின் உறுப்பினர். அங் மோ கியோ குழுத் தொகுதியைச் சேர்ந்த திரு சந்திரசேகரன் பிள்ளைக்கு பொதுச் சேவை நட்சத்திர விருது வழங்கப்பட்டது. இவர் டெக் கீ எஃப் பிரிவு குடியிருப்பு நிலையத்தின் துணைத் தலைவராவார்.

மக்கள் கழக நற்பணிப் பேரவையின் தலைவர் திரு ராமமூர்த்தி கிருஷ்ணனுக்கும் தொடர்பு, தகவல் அமைச்சின் திரு சந்திர மோகன் கே.

நாயருக்கும் பொதுச் சேவை நட்சத்திர விருது வழங்கப்பட்டுள்ளது. தொடர்பு, தகவல் அமைச்சின் ஊடகப் பிரிவின் மூத்த இயக்குநரான திருவாட்டி சுப்பிர

மணியம் அலமேலுவுக்கு பொது நிர்வாகப் பதக்கம் (வெள்ளி) விருது வழங்கப்பட்டுள்ளது.

தொடர்பு, தகவல் அமைச்சின் தகவல்-தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் குழும இயக்குநர் திருவாட்டி சேத்ரா சின்னத்தம்பி, தொழில்நுட்பக் கல்விக் கழக மத்திய கல்லூரியின் தலைமையாசிரியர் திரு சுரேஷ் நடராஜன், உட்லண்ட்ஸ் ரிங் தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் திருவாட்டி கீதா துரைசாமி, சிங்ஹுவா தொடக்கப்

பள்ளியின் தலைமையாசிரியர் திருவாட்டி சந்திரிகா கோபால், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ரசாயனம் மற்றும்

உயிரணுப் பொறியியல் துறையைச் சேர்ந்த இணைப் பேராசிரியர்

லட்சுமிநாராயணன் சாமவேதம், ஹவ்காங் உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு அறிவழகன் மாணிக்கம் முதலியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

"விருது கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எனது தொண்டூழியப் பணிகளுக்கு சிறந்த அங்கீகாரமாக இது உள்ளது," என்று இந்திய நற்பணிப் பேரவையில் 23 ஆண்டுகளாகத் தொண்டூழியப் பணிகளில் ஈடுபட்ட திரு ராமமூர்த்தி கிருஷ்ணன் குறிப்பிட்டார். ஐந்தாண்டுகளுக்கு முன்னதாக PBM விருதைப் பெற்ற திரு ராமமூர்த்திக்கு ,இந்த விருது தமக்குக் கிடைத்திருப்பதைவிட தொண்டூழியத்திற்குக் கிடைத்தது என்றே சொல்லுவதாகக் கூறினார்.

"மேலும் பலர் தொண்டூழியப் பணிக்காக முன்வந்து சமூகத்திற்கு உதவ வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் கூறினார்.

"இந்த விருதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பொதுச்சேவையில் பணியாற்றுவதன் மூலம் சிறிய வழிகளில் என்னால் சிங்கப்பூருக்குப் பங்காற்ற முடிகிறது. கொள்கை வகுப்பாளர்களுடனும் பொதுமக்களுடனும் பணியாற்றும் வாய்ப்பை எனது பணியின் மூலம் பெறுகின்றேன்," என்று தொடர்பு தகவல் அமைச்சில் பணியாற்றும் தகவல் அதிகாரி ஷக்கீரா ஸ்டேஷன்வாலா, 39.

இவருக்குப் பொது நிர்வாகப் பதக்கம் (வெண்கலம்) விருது வழங்கப்பட்டுள்ளது.