சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பாடல்

கொரோனா கிருமித்தொற்று நெருக்கடிநிலை காரணமாக ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ளும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் மனதை நெகிழவைக்கும் பாடல் ஒன்றை அர்ப்பணித்துள்ளது.

இப்பாடலுக்கு ‘டார்ச் ஆஃப் ஹோப்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு உள்ளூர் இசை

யமைப்பாளர் கிளெமண்ட் சாவ் இசையமைத்துள்ளார். பிரபல தேசிய தினப் பாடலான ‘கௌண்ட் ஆன் மி சிங்கப்பூர்’ பாடலை இயற்றி யவர் திரு சாவ். துணிச்சலுடனும் ஒற்றுமையுடனும் இருக்கும்படி நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோரை ‘டார்ச் ஆஃப் ஹோப்’ பாடல் ஊக்குவிக்கிறது. இந்தப் பாடலுக்கு இரண்டு பதிப்புகள் உள்ளன. அவற்றை ஃபேஸ்புக் மூலம் கேட்கலாம். தேசிய சுகாதாரப் பரா

மரிப்பு குழுமத்தின் 20வது ஆண்டு விழாவை முன்னிட்டும் இந்தப் பாடல் இயற்றப்பட்டுள்ளது.

முதல் பதிப்பு ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டது. உள்ளூர் கலைஞர்கள் ரஹிமா ரஹீம், ஜோர்டின் டான், கெவின் பிரென்டன் போன்றோருடன் கிளெமண்ட் சாவும் தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தின் ஊழியர்களும் பாடுகின்றனர்.

கிருமிப் பரவலை முறியடிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதற்கு முன்பு இந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டது.

கொரோனா கிருமித்தொற்று நெருக்கடிநிலையின்போது இப்பாடலின் இரண்டாவது பதிப்பு வெளியிடப்பட்டது.

இதில் தேசிய சுகாதாரப் பரா

மரிப்புக் குழுமத்தின் மூத்த நிர்வாகிகள், பல்வேறு பதவிகள், பிரிவுகள், நிலையங்களைச் சேர்ந்த முன்களப் பணியாளர்கள் ஆகியோர் இதில் இடம்பெறுகின்றனர்.

சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களை ஊக்குவிக்கும் வண்ணம் இந்த இரண்டாவது பதிப்பு அமைந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!