11,000 பொதுப்போக்குவரத்து ஊழியர்களுக்கு கொவிட்-19 சோதனை

11,000 பொதுப்போக்குவரத்து ஊழியர்களுக்கு கொவிட்-19 சோதனை

1 mins read
4592f2b9-015b-431d-9110-116ca220445e
-

புக்கிட் பாஞ்சாங்கின் போக்குவரத்து நிலையத்தில் கிருமித்தொற்றுக்குழுமம் ஒன்று கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பொதுப் பேருந்து நிலையங்களிலும் பணிமனைகளிலும் பணியாற்றும் கிட்டத்தட்ட 11,000 பேர் கொவிட்-19 கிருமிக்காகச் சோதிக்கப்படுவர்.

இவர்களில் பேருந்து ஓட்டுநர், நிர்வாகப் பணியாளர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் அடங்குவர்.

புக்கிட் பாஞ்சாங் கிருமித்தொற்றுக் குழுமத்துடன் 100 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் தொடர்புடையவை என்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

கிருமித்தொற்றுக்குழுமங்கள் உருவாகும்போது நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களைத் தனிமைப்படுத்தி, சுவாப் சோதனைகளைச் செய்து தேவையிருந்தால் சில சேவைகளை நிறுத்தும் என்று சுகாதார அமைச்சும் நிலப்போக்குவரத்து ஆணையமும் தெரிவித்துள்ளன.

ஆயினும், ஓட்டுநர்களும் பயணிகளும் முகக்கவசங்களை அணிவதாலும் பொதுப்போதக்குவரத்துச் சூழலில் ஓட்டுநர்களுடன் மிகக் குறைவான நேரத்தில் தொடர்பு வைக்கும் பயணிகளின் அபாயம் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் வலியுறுத்தினர்.