எஸ்-11 விடுதியில் கிருமித்தொற்று குழுமம் இனி இல்லை

எஸ்-11 விடுதியில் கிருமித்தொற்று குழுமம் இனி இல்லை

1 mins read
98a36af6-c8c1-4411-83fd-f42d735ba059
பொங்கோல் எஸ்11 தங்கும் விடுதியில் இம்மாதம் 21ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் காணப்படும் வெளிநாட்டு ஊழியர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

எஸ்-11 ஊழியர் தங்கும் விடுதியில் முன்னதாக அறிவிக்கப்பட்ட கொவிட்-19 கிருமித்தொற்று குழுமம் இனி இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது.

நான்கு மாதங்களுக்கு முன்னதாக எஸ்-11 விடுதியில் முதல் கொவிட்-19 கிருமித்தொற்று பதிவானது. அன்று முதல் உயர்ந்த கிருமித்தொற்று எண்ணிக்கை இறுதியில் 2,846 ஐ எட்டியது.

புளூ ஸ்டார் டார்மிட்டரி, ஜூ கூன் லாட்ஜ் (68 ஜூ கூன் சர்க்கில்) , கிராஞ்சி லாட்ஜ் (12 கிராஞ்சி ரோடு), எஸ்-11 டார்மிட்டரி@பொங்கோல்( 2 சிலேத்தார் நார்த் லிங்க்), டோ குவான் விடுதி, 10 கெல் டிரைவ், 2 கம்போங் அம்பாட், 31 கிராஞ்சி கிரெசண்ட், 9 சுங்கை கடுட் ஸ்திரீட் 3, 40 துவாஸ் வியூ ஸ்குவேர், 109 துவாஸ் வியூ வாக் 1, 64 உட்லண்ட்ஸ் இன்ட்ஸ்ட்ரியல் பார்க் ஈ9 ஆகிய விடுதிகளிலும் இனி கிருமித்தொற்றுக் குழுமம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட விடுதிகளில் தங்கும் ஊழியர்கள் அனைவரும் கடுமையாக பரிசோதனை செய்யப்பட்டடிருப்பதாக சுகாதார அமைச்சு கூறியது.