மீள்திறனில் பிறந்த அர்த்தமுள்ள கொண்டாட்டம்

சிங்கப்பூர் காட்டி வரும் மீள்திறனில் இவ்வாண்டின் தேசிய தினம் மேலும் அர்த்தமுள்ள ஒன்றாக உருவெடுத்திருப்பதாக நேற்று பல இடங்களில் நடந்த கொடி வணக்க நிகழ்வுகளில் கலந்துகொண்ட தலைவர்கள் பகிர்ந்துகொண்டார்கள். தேசிய தினம் இவ்வாண்டு மாறுபட்டு அமைந்துள்ளதற்கு கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக இருப்பது தொடர்பில் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு முக்கிய பிரிவுகளைச் சேர்ந்த தேசிய தலைவர்கள் பேசினர்.

இருப்பினும், கடந்த பல மாதங்களில் கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் செய்யப்பட்ட தியாகங்களும் வெளிப்பட்ட மீள்திறனும் நாட்டின் 55வது பிறந்தநாளை மேலும் அர்த்தமுடையதாக்கி உள்ளது என்றனர்.

‘இது ஒரு புதிய வழக்கநிலை’

வீடமைப்பு மற்றும் சமூகப் பிரிவு களைப் பிரதிநிதித்த தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, கம்போங் அட்மிரல்டி நிகழ்வில் பேசியபோது, இந்த கொடி வணக்கமே ஒரு புதிய வழக்கநிலையைப் பிரதிபலிக்கிறது என்றார்.

“அனைவரின் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் கருதி, ஒருவருக்கொருவர் அருகில் நிற்காதவாறு நாங்கள் கட்டுப்பாடுகள் விதித்திருந்தாலும், ஒரே மக்கள் என்ற எண்ணத்துடன் ஒன்றிணைய நாம் தொடர்ந்து வழிகளைத் தேடுவோம்,” என்றார் அவர்.

‘ஒன்றிணைந்த சிங்கப்பூர்’

நார்த் விஸ்தா உயர்நிலைப் பள்ளி யில் நடந்த கொடி வணக்க நிகழ்வில் கலந்துகொண்ட கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங், கல்வியாளர்கள் அனைவருக்கும் தம் நன்றியைத் தெரிவித்தார்.

கொவிட்-19 எதிரான அமைச்சு கள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவராகவும் உள்ள திரு வோங், ‘ஒன்றிணைந்த சிங்கப்பூர்’ என்ற தொடரை, கொவிட்-19 கொள்ளைநோய் மேலும் அர்த்தமுடையாக்கி உள்ளதாக சொன்னார்.
“சோதனைக்கு ஆளானோம்; ஆனால் நாம் தோல்வி அடையவில்லை. மீண்டு வந்துள்ளோம்; ஒரு தேசமாக மேலும் வலுப் பெற்றுள்ளோம்,” என்றார் அவர்.

‘விமானப் போக்குவரத்தில் நலிவு இருந்தாலும் நம்மிடம் வலிமை’

சாங்கி விமான நிலையத்தின் விமானக் கட்டுப்பாட்டுக் கட்டடத்திற்குச் சென்றிருந்தார் போக்கு வரத்து அமைச்சர் ஓங் யி காங். அங்கிருந்த ஊழியர்களிடம் பேசிய அவர், “தற்போது விமானப் போக்கு வரத்து மந்தமாகியுள்ளது. இருந்தாலும் நம்மிடையே காணப்படும் உற்சாகம் உச்சத்தில் உள்ளது.

“கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக சிங்கப்பூரை ஒரு விமானத்துறை மையமாக உருவாக்கி வந்தோம். ஆனால் கொவிட்-19 கிருமித்தொற்று அதை நலிவடையச் செய்துள்ளது. வரும் நாட்களில் அதைச் சரிசெய்யும் முயற்சியை நாம் தொடங்குவோம்,” என்றார் அவர்.

‘நாட்டின் நம்பிக்கையை சிதைக்க முடியாது’

தேசிய தொற்று நோய் நிலையத்திலிருந்து பேசிய சுகாதார அமைச்சர் கான் கிம் யோங், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு தம் நன்றியைத் தெரிவித்தார்.

பாதிப்பிலிருந்து மீண்டு வரும் பயணம் கடினமானது. ஆனால் கொவிட்-19 கிருமி, நாட்டின் நம்பிக்கை, மீள்திறன், உறுதி, ஒற்றுமையைச் சிதைக்க முடியாது என்று தாம் நம்புவதாக திரு கான் குறிப்பிட்டார்.

‘நன்றி சொல்ல பல உண்டு’

பாய லேபாரில் அமைந்துள்ள வாழ்நாள் கற்றல் நிலையத்தில் கொடி வணக்கம் நிகழ்வில் கலந்துகொண்ட மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ, அங்கு கூடியிருந்தோரிடம் பேசியபோது, “இன்னும் நாம் நன்றி சொல்லிக்கொள்வதற்கு பல அம்சங்கள் இருக்கின்றன,” என்றார்.

கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை இங்கு குறைவாக உள்ளதையும் மக்கள், வர்த்தகங்கள், பொதுச் சேவைத் துறை மீள்திறனுடன் இயங்கி வருவதையும் அவர் குறிப்பிட்டுச் சொன்னார்.

‘அத்தியாவசிய சேவையில் உள்ளோருக்கு நன்றி’

அத்தியாவசிய சேவை வழங்கும் ஊழியர்களுக்குத் தம் நன்றியைத் தெரிவித்தார் வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங். உணவும் அத்தியாவசிய சேவைகளும் தொடர்ந்து மக்களை வந்து அடைவதற்காக அவர்கள் ஆற்றும் பணியை அவர் என்டியுசி ஃபேர் பிரைஸ் மையத்தில் நடந்த நிகழ்வில் இருந்தவாறு பாராட்டினார்.

‘தோள்கொடுக்கும் தன்மை’

கொவிட்-19 நெருக்கடி காலத்தில் சிங்கப்பூரர்கள், நிறுவனங்கள், சமூகக் குழுக்கள் முன்வந்து வசதி குறைந்தோருக்கு உதவியதும் முன்களப் பணியாளர்களுக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் ஆதரவளித்ததும் தம்மை நெகிழ வைப்பதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!