இணையம் வழி ‘எங்கள் சிங்கப்பூர்’ பாடல் வெளியீடு

சிங்கப்பூரின் 55வது தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சிங்கப்பூரின் அருமைகளையும் பெருமைகளையும் எடுத்துரைக்கும் வண்ணம், ‘எங்கள் சிங்கப்பூர்’ எனும் பாடல், இம்மாதம் 9ஆம் தேதி சிங்கப்பூரின் தேசிய தினத்தன்று ஃபேஸ்புக் நேரலையில் வெளியீடு கண்டது.

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யின் தலைவரும் பட்டயக் கணக்காய்வாள

ருமான முனைவர் மு.அ. காதர் எழுதிய பாடலுக்கு, சிங்கப்பூர் இசைக்கலைஞர் திரு பரசு கல்யாண் இசையமைத்து காணொளி யாக உருவாக்கியிருந்தார்.

சிங்கப்பூர் வாழ் இசைக்கலைஞர்களாகிய அருண் பிரசாத், தீபக் ஐயர், கார்த்திக் மகாதேவன், மாதவன் குணா, ம்ரினல் நாராயன், மைத்ரயி வாசுதேவன், மதியழகன், பிரசாந்தி சந்தானம், ரவின் ராஜ், சேது, சோபனா ராச்சேல், சுமா பாலகிருஷ்ணா, விநாயா ராஜகோபால், பரசு கல்யாண் உள்ளிட்ட 14 பாடகர்கள் முதன்முறையாக இணைந்து இப்பாடலை உருவாக்கியுள்ளனர். சிங்கப்பூர் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திரு இரா. தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, இப்பாடலை ஃபேஸ்புக் நேரலையில் வெளியீடு செய்து, இப்பாடலின் சிறப்பியல்புகளைப் பற்றி எடுத்துரைத்தார். லிஷா இலக்கிய மன்றத்தின் தொழில்நுட்ப உதவியுடன், திரு அர்ஜுன் நாராயணன் இந்நிகழ்ச்சியை இணையம் வழி தொகுத்து வழங்கினார்.

“எங்கள் சிங்கப்பூர்; இது எங்கள் சிங்கப்பூர்; வாழ்க வாழ்கவே சிங்கப்பூர்! வளர்க வளர்கவே சிங்கப்பூர்!” எனும் பாடல் வரி

களைக் கொண்டு, நாட்டுப் பற்றை வெளிப்படுத்தும் வண்ணம் பாடலும் இசையும் அமைந்துள்ளன. இப்பாடலை https://youtu.be/mxlRUNg Cems என்ற இணையப் பக்கத்தில் காணலாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon