மோசடி சம்பவங்கள் மூலம் பெற்ற பணம்; மாதுக்கு 20 மாத சிறை

மோசடி சம்பவங்கள் மூலம் பெற்ற பணம்; மாதுக்கு 20 மாத சிறை

1 mins read
f5f42036-447a-4af9-99bd-6b0ccf5da101
நாளை மறுதினம் (மார்ச் 18) அரசு நீதிமன்றத்தில் அந்த ஆடவர் சரணடைவார். -

இங் கூன் லே என்ற 64 வயது மாதை பலமுறை வர்த்தகப் பிரிவு துறை எச்சரித்தும், தனது வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி முகமறியாத வெளிநாட்டினரிடம் இருந்து பணம் பெற்ற குற்றத்திற்காக 20 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவருடைய கணக்கில் ஒரு சமயம் யுஎஸ் $88,000 (சிங்கப்பூர் $118,360) வந்தது.

இந்தப் பணம் அனைத்தும் பல்வேறு மோசடி சம்பவங்களில் பெறப்பட்டது என்று தெரிய வந்துள்ளது. முறையற்ற விதத்தில் திருட்டுப் பணத்தை பெற்ற ஒரு குற்றச்சாட்டை இவர் ஒப்புக்கொண்டார். அத்துடன், இந்தக் குற்றச்செயல்கள் மூலம் பெற்ற பணத்தை வேறு நபர்களுக்கு மாற்றிய குற்றச்சாட் டையும் ஒப்புக்கொண்டார்.

மேலும் இதுபோன்ற 16 குற்றச்சாட்டுகளும் தண்டனை விதிப்பில் கருத்தில் கொள்ளப்பட்டன.