கொவிட்-19: புதிதாக 800 ஊழியர்களுக்குத் தனிமை உத்தரவு

 

கிருமித்தொற்று இல்லை என அறிவிக்கப்பட்ட ஊழியர் விடுதி ஒன்றில் ஒருவருக்கு கிருமித்தொற்று உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து 800 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இதனை அறிவித்த சுகாதார அமைச்சு, சம்பந்தப்பட்ட விடுதியின் பெயரை வெளியிடவில்லை.

விடுதியில் தங்கும் ஊழியர்கள் அனைவரையும்  அமைச்சுநிலை பணிக்குழு சோதனை செய்திருந்தபோதும் இந்த 800 பேர் உட்பட தற்போது 22, 800 ஊழியர்கள் தொடர்ந்து தனிமை உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர்.

தங்களது தனிமைக்காலம் முடிந்த பிறகு இந்த ஊழியர்கள் சோதிக்கப்படுவர். தினசரி கிருமித்தொற்று எண்ணிக்கை குறையும் என்றாலும்  அடுத்த சில நாட்களுக்கு தொடர்ந்து அதிகமாக இருக்கும் என்று சுகாதார அமைச்சு எதிர்பார்க்கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon