மியன்மார் பணிப்பெண்ணுக்குச் சிறை 

வேலைக்குச் சேர்ந்த முதல் மாதத்திலேயே 92 வயது மூதாட்டியைத் தள்ளிவிட்டு, காயம் விளைவித்த மியன்மார் பணிப்பெண்ணுக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கீழே விழுந்ததால் தலையில் காயமடைந்த திருவாட்டி வோங் யோங் என்ற அம்மூதாட்டி, தமது மரணம் வரை படுத்த படுக்கையாய் இருக்க நேரிட்டது.

அவரைத் தான் தள்ளிவிடவே இல்லை என்று சேண்டர், 33, என்ற அப்பணிப்பெண் மறுத்தபோதும் சிசிடிவி அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டது. இலேசான ஞாபக மறதியால் பாதிக்கப் பட்டிருந்த திருவாட்டி வோங்கை பார்த்துக்கொள்வதற்காக சேண்டர் பணியமர்த்தப்பட்டார். கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி இரவு அவர்களுக்குள் வாக்குவாதம் எழ, திருவாட்டி வோங்கின் நெஞ்சில் கைவைத்து தள்ளிவிட்டார் சேண்டர்.  

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon