மின்னிலக்கமயமாகும் பயிற்சி, பெரியோர் கல்வித் துறை

சிங்கப்பூரின் பயிற்சி, பெரியோர் கல்வித் துறை மின்னிலக்கமயமாகிறது. அதற்கான புதிய தொழில்துறை மின்னிலக்கத் திட்டம், ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பெரியோர் கல்வி மாநாட்டில் நேற்று அறிமுகம் கண்டது.

கொவிட்-19 கிருமிப் பரவலால் ஏற்பட்டுள்ள வேலை வாய்ப்பு நிச்சயமின்மைக்கிடையே, இத்துறையின் மின்னிலக்க உருமாற்றத்தை முன்னெடுப்பது இத்திட்டத்தின் நோக்கம்.

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர், தொடர்பு தகவல் மேம்பாட்டு ஆணையம், பெரியவர் கல்வி நிலையம் ஆகியவை இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தன.

முதன்முறையாக இணையம் வழியாக நடைபெற்ற இந்த மாநாட்டில் பேசிய கல்வி, மனிதவள அமைச்சுகளுக்கான துணையமைச்சர் கான் சியாவ் ஹுவாங், தற்போது உருவாகியுள்ள புதிய வழக்கநிலைக்கு ஏற்ப பயிற்சி, பெரியோர் கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மூன்று முக்கிய மாற்றங்களை விளக்கினார்.

வேலையிடத்தில் கற்றலை அதிகரித்தல், மின்னிலக்கமயமாதலை அதிகரித்தல், தடைக்கற்களை குறைப்பதன் மூலம் மக்கள் சேவைத் தரத்தை அதிகரித்தல் ஆகியவை இந்த மாற்றங்கள்.

“சூழலுக்கேற்ப மாறவும் திறன்களைக் கற்றுக்கொள்ளவும் ஊழியர்களுக்கு உதவ அரசாங்கம் கடந்த சில மாதங்களாக பல்வேறு பயிற்சி ஆதரவுத் திட்டங்களை வெளியிட்டது.

“இந்தத் திறன்களையும் பயிற்சி வாய்ப்புகளையும் வழங்கு வதில் பயிற்சி, பெரியோர் கல்வி நிபுணர்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றனர்,” என்று திருவாட்டி கான் கூறினார்.

“சிங்கப்பூரில் தற்போது பல்வேறு வர்த்தகங்களும் ஊழியர்களும் எதிர்நோக்கும் தடங்கல்களிலிருந்து இந்தத் துறையும் தப்பாது. எனினும், அனைத்து மாற்றங்களுடன் குறிப்பிடத்தக்க வளர்ச்சியும் இருக்கும்,” என்று அவர் கூறினார்.

பயிற்சி அளித்து வேலையில் அமர்த்தும் திட்டத்தின் வெற்றிக்கு எடுத்துக்காட்டாக, பெயர்பெற்ற உணவகங்களுடன் ‘சன்ரைஸ் குளோபல் செஃப் அகாடமி’ வழங்கிய பணியிடப் பயிற்சியை குறிப்பிட்ட திருவாட்டி கான், வேலையிடப் பயிற்சியின் முக்கியத்துவத்துக்கு இது ஒரு சான்று என்றார்.

புதிதாகத் தொடங்கப்பட உள்ள வேலையிட கற்றலுக்கான தேசிய சிறப்பு மையம், பெரியோர் கல்வியாளர்கள் மீது கவனம் செலுத்தும். ஊழியர்களின் பயிற்சி, மேம்மாட்டில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த புதிய மையம் யூனோஸ் சாலையில் உள்ள பெரியோர் கல்விக் கழகத்தில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்பட உள்ளது.

பயிற்சி, பெரியோர் கல்வித் துறையும் மின்னிலக்க மயமாக்கத்தின் வேகத்தை துரிதப்படுத்த வேண்டும் என்று திருமதி கான் கூறினார்.

மூன்று ஆண்டு காலத்தில் மின்னிலக்கப் பாடத்திட்ட உருவாக்குநர்களுடன் இத்துறையின் 200 பயிற்சியாளர்களை இணைக்கும் புதிய முயற்சி அடுத்த மாதம் தொடங்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!