கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் பொறுப்புடன் சந்தைக்குச் சென்ற மக்கள்

கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் பொறுப்புடன் சந்தைக்குச் சென்ற மக்கள்

1 mins read
42d8fafc-eee7-4dae-b5d6-4ba2a36ecfef
கட்டுப்பாடுகள் அகற்றப்பட்ட முதல் நாளான நேற்று, சொங் பாங் சந்தையில் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றிய மக்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொரோனா கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கேலாங் சிராய், சொங் பாங், மார்சிலிங் லேன், ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 52 ஆகிய இடங்களில் உள்ள ஈரச் சந்தைகளுக்குச் செல்ல விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு கள் நேற்றுடன் அகற்றப்பட்டதால் அதிக மக்கள் சந்தைக்குச் சென்றனர். இங்கு அடையாள அட்டை இறுதி இலக்க எண் கொண்டு அனுமதிக்கப்பட்ட நடவடிக்கை வாரநாட்களில் இனி இருக்காது. எனினும் வார இறுதி நாட்களில் தொடர்ந்து இந்தக் கட்டுப்பாடு இருக்கும். 'சேஃப்என்ட்ரி' எனப்படும் பாதுகாப்பு வருகைப் பதிவு முறை யும் ஒரு மீட்டர் இடைவெளியும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.