இரவு வெப்பத்துக்கு பிறகு சில்லென்ற ஒரு காலை

இரவு வெப்பத்துக்கு பிறகு சில்லென்ற ஒரு காலை

1 mins read
d2fbcfa2-381a-4528-80ca-0e1ff22b8a5a
கனமழையால் அல்ஜுனிட் சாலையில் 50 மில்லிமீட்டர் அளவுக்கு மழை நீர் நிரம்பி ஓடியது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் -

வானிலை நிலையம் முன்னுரைத்தபடி, வெப்பமும் ஈரமும் நிறைந்ததாக இவ்வாரம் உள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு வெதுவெதுப்பான அளவில் 30.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியது. ஆனால் நேற்று காலை மழையும் குளிரும் வெப்பநிலையை 22.5 டிகிரி செல்சியசுக்கு இறக்கி வைத்தன.

கனமழை காரணத்தால் தீவு விரைவுச்சாலை பாலத்தின் முன்னால் அமைந்துள்ள அல்ஜுனிட் சாலையில் காலை 7 மணியளவில் 50 மில்லிமீட்டர் அளவுக்கு மழை நீர் ஓடியதாக பொதுப் பயனீட்டுக் கழகம் கூறியது.

மாதத்தின் முதல் பாதியில் இரவு நேரத்தில் வெப்பமும் ஈரப்பதமும் நிலவும் என்று முன்னுரைக்கப்பட்டிருந்தது.