மருத்துவர்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன

மருத்துவர்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன

1 mins read
f6de9363-cb80-4c6f-bfc4-baa76d3e3fff
-

கொவிட்-19 காரணமாக மருத்துவர்களும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களும் ஒரு மருத்துவமனையிலிருந்து இன்னொரு மருத்துவமனைக்குச் சென்று பணியாற்றுவது தொடர்பாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் விளைவாக கூடுதல் நோயாளிகளுக்கு மருத்துவர்களும் சுகாதாரப் பராமரிப்பாளர்களும் உதவலாம்.

ஆனால் தாதிமை இல்லங்கள் போன்ற நீண்டகால பராமரிப்பு வழங்கும் நிலையங்களுக்கு மற்ற மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்களும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களும் சுகாதார அமைச்சின் அனுமதி கிடைத்தால் மட்டுமே செல்ல முடியும். கட்டுப்பாடுகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சேவைகள் இனி தொடரும்