கிராஞ்சி போர் நினைவகத்தில் தனிப்பட்ட சடங்கு

1 mins read
798a2fc5-bcfa-4831-93b2-8662f4235025
-

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்து நேற்றுடன் 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதை அனுசரிக்கும் வகையில் கிராஞ்சி போர் நினைவகத்தில் நேற்று தனிப்பட்ட சடங்கு நடத்தப்பட்டது. தென்கிழக்காசிய நாடுகளில் ஜப்பானியர்களை எதிர்த்துப் போரிட்ட சிங்கப்பூரர்களுக்கும் கூட்டணிப் படையினருக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. தென்கிழக்காசிய வட்டாரத்தில் 24,000க்கும் மேற்பட்ட கூட்டணிப் படையினர் மடிந்தனர்.

படம்: பிரிட்டிஷ் தூதரக ஃபேஸ்புக்