இம்மாதம் 12ஆம் தேதி புக்கிட் மேரா லேனில் சந்தேக நபர் ஒருவரை மடக்கி போலிசார் சோதனையிட்டனர். ஆனால் அவர் ஒத்துழைக்காமல் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்.
காரின் வேகத்தை திடீரென அதிகரித்த அவர் சோதனை செய்து கொண்டிருந்த அதிகாரியை நோக்கி ஓட்டினார். பின்னர் அந்த ஆசாமி தப்பிவிட்டார். இந்தச்சம்பவத்தில் போலிஸ்காரர் ஒருவர் காயம் அடைந்தார்.
இதையடுத்து மறுநாளே சந்தேக நபரை போலிசார் கைது செய்தனர். போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டையும் அவர் எதிர்நோக்குவதாக போலிசார் கூறினர்.
இம்மாதம் 14ஆம் தேதி அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. போலிசாரிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட குற்றத்திற்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனை அல்லது 5,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

