அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று 'யூத் கார்ப்ஸ்' அமைப்பின் இளையர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர், கொவிட்-19 சவால்களுக்கு எதிராக இளையர்களும் போராடுகின்றனர் என்று குறிப்பிட்டார். இருந்தாலும் முக்கிய அம்சங்களிலிருந்து நமது கவனம் திசை திரும்பிவிடக்கூடாது என்று அவர் அறிவுறுத்தினார்.
கொவிட்-19 பிரச்சினைகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள புதிய சந்தர்ப்பங் களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர். சிங்கப்பூரின் பொருளியலை மறுசீரமைக்கும் பணி, புதிய சந்தைகள், புதிய வாய்ப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். கலந்துரையாடலை 29 வயது முகம்மது ஸாக்கி டுஜுவான்டா (அதிபருக்கு பக்கத்தில் அமர்ந்திருப்பவர்) வழி நடத்தினார்.
(படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்_

